கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் திருமணம்.. இணையத்தில் வைரலாகும் அழைப்பிதழ்!

நடிகர் அசோக் செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகியோரது திருமணம் அடுத்த மாதம் 13ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது.
கீர்த்தி பாண்டியன்,  அசோக் செல்வன்
கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன்ட்விட்டர்

நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மூன்றாவது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகையாகவும் உள்ளார். இந்த நிலையில், நடிகை கீர்த்தி பாண்டியன் நடிகரான அசோக் செல்வனை திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் பரவின. நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் நடித்திருந்த ‘போர்த் தொழில்’ படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. ’ப்ளூ ஸ்டார்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது அவர்கள் இருவருக்குள்ளும் காதல் உருவானதாகக் கூறப்பட்டது.

அதையொட்டி, அவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதன்படி, அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதிகாரப்பூர்வமாக திருமண தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நடிகை கீர்த்தி பாண்டியன் - நடிகர் அசோக் செல்வன் ஆகியோரது திருமணம் அடுத்த மாதம் 13ஆம் தேதி திருநெல்வேலியில் அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் நடைபெறவுள்ளது.

திருநேல்வேலி மாவட்டம் இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணை இல்லத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி காலை 6 -7 மணியளவில் திருமணம் செய்ய இருப்பதாக அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமணம் முடிந்தவுடன் அனைவருக்கும் பசுமை விருந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com