\
அஜித்
அஜித்முகநூல்

”மதமும், சாதியும் ஒரு மனிதனை வெறுக்க வைக்கும்; ஆனால்..” - வைரலாகும் அஜித்தின் பழைய டிராவல் வீடியோ!

ஒரு பயணம் ஒரு நபரை வாழ்வில் சிறந்த மனிதராக மாற்றும் என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அஜித் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Published on: 

ஒரு பயணம் ஒரு நபரை வாழ்வில் சிறந்த மனிதராக மாற்றும் என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அஜித் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஒரு மதம் மக்களை வெறுக்க வைக்கும், ஆனால் அவர்களை சந்தித்த பிறகு அது மாறும் என்ற வரிகளை மேற்கொள்காட்டியுள்ள அஜித்குமார், இது போலதான், மதம் மற்றும் இனத்தை வைத்து நாம் ஒரு கணிப்பில் இருப்போம், அவர்களை சந்தித்த பிறகுதான் அவர்களின் உண்மை நிலை என்னவென்று தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பயணம் அங்குள்ள மக்களை பற்றி அறிந்து கொள்வது மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அஜித்
மதம் கடந்த காதல் திருமணம் | ட்ரோல் செய்த பதிவுகள்.. கசப்பான விமர்சனங்களுக்கு பதிலளித்த ப்ரியாமணி!

இது போன்ற பயணங்கள் ஒரு சாதரண நபரை, சிறந்த மனிதராக மாற்றும் என்றும் அஜித்குமார் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அஜித் பேசும் இந்த வீடியோ அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com