வாவ்... இதெல்லாம் அஜித் எடுத்த ஃபோட்டோஸா? வைரலாகும் புகைப்படங்கள்!

விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித் குமார் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
அஜித் குமார்
அஜித் குமார் புதிய தலைமுறை

விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித் குமார் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, தற்போது நடிகர் அஜித் குமாரை வைத்து விடாமுயற்சி என்ற திரைபடத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித் படப்பிடிப்பு தளத்தில் அர்ஜுன், ரெஜினா, இயக்குநர் மகிழ்திருமேனி, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆகியோரை புகைப்படம் எடுத்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும் அர்ஜுனும் இணைந்து நடிப்பதால், விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அப்புகைப்படங்களை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com