\
'விஸ்வாசம்' நடனக் கலைஞர் உயிரிழப்பு: அஜித் நிதியுதவி

'விஸ்வாசம்' நடனக் கலைஞர் உயிரிழப்பு: அஜித் நிதியுதவி

'விஸ்வாசம்' நடனக் கலைஞர் உயிரிழப்பு: அஜித் நிதியுதவி
Published on: 

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பில் பங்கேற்ற நடனக்கலைஞர் ஒவியம் சரவணன் என்பவர் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு நடிகர் அஜித் நிதி உதவி அளித்துள்ளார்.

நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதற்கான பாடல் காட்சி ஒன்று புனேயில் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஓவியம் சரவணன் என்ற நடனக் கலைஞரின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால் அவர், உடனடியாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை நடந்துகொண்டிருந்தபோதே சரவணன் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த அஜித் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரித்தாகவும் பிரேத பரிசோதனை முடியும் வரை மருத்துவமனையிலேயே அவர் இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஓவியம் சரவணனின் உடல் புனேயிலிருந்து சென்னைக்கு அனுப்பும் ஏற்பாடு முழுவதையும் நடிகர் அஜித் செய்தது தங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக விஸ்வாசம் படக்குழுவினர் கூறியுள்ளனர். ஓவியம் சரவணன் குடும்பத்திற்கு நடிகர் அஜித் நிதியுதவி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com