[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

இந்தியாவுக்கு எதிரான தொடர்: ஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்!

smith-warner-bans-could-be-lifted

தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சரிவில் இருந்து மீட்க, ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்கா சென்று விளையாடியது. அப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற டேப்பைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. டிவி கேமராவிலும் அது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பேன்கிராஃப்ட் தவறை ஒப்புக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதாகவும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து வார்னர், ஸ்மித்துக்கு தலா ஒரு வருடமும் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. 

ஒருபக்கம் தடைவிதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்துவிட்டது.

  இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இங்கிலாந்தில் படு தோல்வி அடைந்த அந்த அணி, அடுத்து பாகிஸ்தான் அணியுடன் நடந்த தொடரிலும் படு தோல்வி அடைந்தது. இப்போது தென்னாப்பிரிக்க அணியுடனும் தோல்வியை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில் இந்திய அணியுடன் மோத உள்ளது. இந்திய அணி இந்த மாதம் 21ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை, 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அங்கு விளையாட உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் தங்கள் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்றால், ஸ்மித், வார்னரை அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

(டேவிட் பீவெர்)

இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவிட் பீவெர் மீண்டும் மறுத்தார். இதையடுத்து ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அவர் பதவி விலகினார். துணைத் தலைவராக இருந்த எர்ல் எட்டிங்ஸ் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சரிவில் இருந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது.


கிரிக்கெட் வாரிய  அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கூறும்போது, ''வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்க கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. அது பரிசீலிக்கப்படும். வீரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்’ என்று கூறியுள்ளார். இதனால் இந்திய தொடர் தொடங்குவதற்குள் அவர்கள் மீதான தடை விலக்கிக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close