மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், கௌதம் மேனன்
மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், கௌதம் மேனன்pt web

VTV: ஆரம்பப்புள்ளி மகேஷ் பாபு.. பிரம்மாண்ட ஆக்சன் க்ளைமாக்ஸ்.. சிம்பு உள்ளே வந்தது எப்படி?

சமீபத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா பற்றி பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் பேசிய விஷயம் இப்போது பேசு பொருளாகியிருக்கிறது.
Published on

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. 2010ல் வெளியான இப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 1000 வாரங்களைத் தாண்டி சென்னையில் இப்படம் ஒரு ஷோ ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் இப்படம் பற்றி பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் பேசிய விஷயம் இப்போது பேசு பொருளாகியிருக்கிறது.

ஒரு பெரிய தெலுங்கு ஹீரோ தன்னை அழைத்து, "எனக்கு ஒரு படம் பண்ணுங்க" எனக் கேட்டுக் கொண்டதால் கௌதம் கதை எழுத துவங்கி இருக்கிறார். அதுதான் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ஆரம்பப்புள்ளி. மேலும், விடிவி படத்திற்கு கௌதம் முதலில் ஒரு பிரமாண்டமான க்ளைமாக்ஸை எழுதியிருந்தது பற்றியும் இப்பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தப் பேட்டியில் யார் அந்த நடிகர் எனக் குறிப்பிடவில்லை என்றாலும், முன்பு பல பேட்டிகளில் அதைப் பற்றி கூறியிருக்கிறார் கௌதம் மேனன். அந்த ஹீரோ யார் என்பது பற்றியும், விடிவி படத்திற்கு கௌதம் முதலில் எழுதிய அந்த பிரம்மாண்ட க்ளைமாக்ஸ் என்ன என்பதையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், கௌதம் மேனன்
பறப்பதற்கு அனுமதியை கேட்காதீர்கள்... சசி தரூர் போட்ட பதிவு; கார்கேவிற்கு பதிலடியா?

மகேஷ்பாபு மறுத்தது ஏன்?

`மின்னலே', `காக்க காக்க', `வேட்டையாடு விளையாடு', `வாரணம் ஆயிரம்' என கௌதம் இயக்கிய பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதே சமயம் `காக்க காக்க' படத்தின் தெலுங்கு ரீமேக்காக, வெங்கடேஷ் நடிப்பில் உருவான `கர்ஷணா' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் பிரபலமானார் கௌதம். அப்போது கௌதம் மேனனை அழைத்து தன்னை வைத்து ஒரு படம் இயக்குமாறு கேட்டிருக்கிறார் ஹீரோ மகேஷ் பாபு. மகேஷ் பாபுவின் சகோதரி மஞ்சுளா இப்படத்தை தயாரிக்க இருந்தார். கிட்டத்தட்ட ஒப்பந்தம் செய்யும் நிலையில் இருந்த போது, படத்தின் கதையை மகேஷ்பாபு கேட்டிருக்கிறார். ‘இது ரொமான்டிக் கதையாக இருக்கிறது, நாம் இருவருவரும் இணைந்து படம் செய்யும் போது அது ஒரு ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் என ஆடியன்ஸ் எதிர்பார்ப்பார்கள். எனவே இது வேண்டாம்’ என மகேஷ்பாபு மறுத்திருக்கிறார்.

அதன் பின் இந்தக் கதையை அல்லு அர்ஜுனிடம் கூறியிருக்கிறார் கௌதம். அவரும் மறுத்துவிட பின்பு புதுமுக நடிகர்களை வைத்து படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால் படத்தில் வெளிநாட்டு படப்பிடிப்பு போன்ற பட்ஜெட் அதிகமாகும் விஷயங்கள் இருந்ததால், படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வியாபாரத்தை கொண்டு வரும் நடிகர் இருந்தால்தான் லாபம் வரும் என தயாரிப்பாளர் தரப்பு சொல்ல, அவர்களின் ஆப்ஷனாக வந்த நடிகர்தான் சிம்பு. அப்படி துவங்கிய படம்தான், இன்று ஒரு க்ளாசிக் படமாக மாறியிருக்கிறது.

மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், கௌதம் மேனன்
Panchayat S4 to Squid Game S3 | இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ..!

VTVக்கான முதல் க்ளைமாக்ஸ்

இப்போது விடிவி படத்திற்கு கௌதம் மேனன் எழுதிய முதல் க்ளைமாக்ஸ் பற்றி பார்க்கலாம். கௌதம் மேனன் இந்தக் கதையை தமிழில் சிம்பு - த்ரிஷா நடிப்பில் `விண்ணைத்தாண்டி வருவாயா' எனவும், தெலுங்கில் நாக சைதன்யா - சமந்தா நடிப்பில் `ஏ மாய சேசாவே ' எனவும் பைலிங்க்குவலாக ஒரே நேரத்தில் எடுத்தார். தமிழில் ஹீரோ - ஹீரோயின் பிரிவது போன்றும், தெலுங்கில் ஹீரோ - ஹீரோயின் சேர்வது போன்றும் எடுத்திருந்தார் கௌதம்.

ஆனால் இந்தக் கதையை மகேஷ் பாபுவுக்கு என எழுதும் போது படத்திற்கு கௌதம் எழுதிய க்ளைமாக்ஸ் என்ன தெரியுமா?

இப்போது இருக்கும் கதைப்படி படத்தில், ஹீரோ இயக்குநராகும் முயற்சியில், உதவி இயக்குநராக பணியாற்றி வருவார். படத்தின் ஒளிப்பதிவாளர் ஹீரோவுக்கு நல்ல நண்பராக இருப்பார். அதுவே முதலில் எழுதிய வெர்ஷனில், சிரஞ்சீவி போல ஒரு பெரிய ஹீரோ படத்தில் மகேஷ் பாபு உதவி இயக்குநராக பணியாற்றுவதாகவும், படத்தின் ஹீரோவுக்கும் மகேஷ் பாபுவுக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாக எழுதி இருக்கிறார் கௌதம். படத்தின் க்ளைமாக்சில் ஒரு பக்கம் ஹீரோயினுக்கு திருமணம், இன்னொரு பக்கம் மகேஷ்பாபு ஷூட்டிங்கில் மாட்டிக் கொள்வார். ஹீரோயின் திருமணம் பற்றி கேள்விப்படும் அந்த பெரிய ஹீரோ, மகேஷ்பாபுக்கு ஹெலிகாப்டர் கொடுப்பதாகவும். அதில் சென்று ஹீரோயின் திருமணத்தை மகேஷ்பாபு தடுப்பதாகவும் எழுதியிருந்தாராம் கௌதம் மேனன். ஒரு கவிதை போல நாம் பார்த்த க்ளைமாக்ஸ், ஒரு மாஸ் மசாலா படம் போல எழுதப்பட்டு இருந்தது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது.

மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், கௌதம் மேனன்
குபேரா - தெலுங்கில் சூப்பர் ஹிட்.. தமிழில் சுமார்.. காரணம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com