ஸ்ருதியின் படப்பிடிப்பில் சரிகா சர்ப்ரைஸ் விசிட்
நடிகை ஸ்ருதிஹாசன் தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் ஒரு முக்கிய கேரக்டரில் ஸ்ருதி நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்து வருவதாக செய்தி வலம் வருகிறது. இதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஸ்ருதி அம்மாவும், மூத்த நடிகையுமான சரிகாவும் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். அப்போது தனது மகளின் நடிப்பை நேரில் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இச்சந்திப்பு குறித்து படக்குழுவினர் கூறும் போது, ‘‘மகேஷ் மஞ்சரேக்கர் ஒரு திறமையான டைரக்டர். அவர் அளவுக்கு ஸ்டோரி சொல்லக்கூடியவர்கள் குறைவு. அவரது படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக்கொண்டதை கேள்விப்பட்ட அவரது தாயார் சரிகா மிகவும் சந்தோஷப்பட்டார். இயக்குநரின் வழிக்காட்டுதலை ஸ்ருதி பின்பற்றினால் அவரின் நடிப்புத் திறமை மேலும் பளிச்சிடும் என்று சரிகா அறிவுரை வழங்கினார். தேசிய விருது பெற்ற இயக்குநர்களின் கைகளில் ஸ்ருதி தன்னை ஒப்படைத்திருப்பதை அவர் உளமார பாராட்டிப் பேசினார்.
படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த தன் தாயாரை அங்கு பணியாற்றிய அனைவருக்கும் தனித்தனியாக ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தினார். அதன்பின் ஸ்ருதி, படத்தில் தான் ஏற்றிருக்கும் கேரக்டரை பற்றியும், இயக்குநர் தன்னிடம் வேலை வாங்கும் நுட்பத்தையும் அழகாக சரிகாவிடம் விவரித்தார். படப்பிடிப்பு தளத்திற்கு அவரது தாயார் வருகை தந்து தன்னை உற்சாகப்படுத்திய பிறகு அன்று முழுக்க ஸ்ருதியும் செம ஹேப்பியாக வலம் வந்தார்” என்றனர்.