X-ல் பதிவிட்டு புலம்பிய பிக்பாஸ் பிரபலம்.. போதைப்பொருள் இருப்பதாக சோதனை நடத்தியதால் அதிர்ச்சி!
பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. புகார் கொடுத்தது யார் என கேள்வி எழுப்பிய அவர், எந்த ஆதாரமும் இல்லாமல் சோதனை நடத்தப்பட்டதற்கு விளக்கம் கேட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பதிவிட்ட அவரது கருத்துகள் திரைத் துறையிலும் பொதுமக்களிடமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை அடுத்த ஆவடி திருவேற்காடு பகுதியில் அமைந்துள்ள பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் இல்லத்தில் திருவேற்காடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் இந்த சோதனை தொடர்பாக சமூக வலைதளங்களில் சில பதிவுகளை பதிவு செய்துள்ளார். குறிப்பாக எந்தவித புகார் முகப்பும் இல்லாமல் தனது இல்லத்தில் திருவேற்காடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 15க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டதாகவும், இந்த சோதனை தொடர்பான புகார் குறித்து தன்னிடம் தகவல் ஏதும் தெரிவிக்காமல் சோதனை மேற்கொண்டதாக கூறி வீடியோ காட்சியினை ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
மேலும் மற்றொரு பதிவில் எனக்கு ஒரு விஷயம் மட்டும்தான் தெரிந்துகொள்ள வேண்டும். புகார் கொடுத்தது யார்? @actorvijay, யார் புகார் கொடுத்தார்கள், எதற்காகப் புகார் கொடுத்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்! நான் பலமுறை கேட்டும் அவர்கள் அதைப் பற்றி எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில் ரத்தப் பரிசோதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால் உங்கள் காவல் துறையின் செயல்பாடு வெட்கக்கேடானது!. 15 காவல்துறையினர் என் வீட்டிற்கு வந்தார்கள். ஆனால் அவர்கள் கண்டுபிடித்ததெல்லாம் 3 பூனைகளையும், ஒரு நாயையும் மட்டும்தான். ஆனால், எந்த அடிப்படையில் அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதால், சோதனை வாரண்ட் இல்லாமலேயே காவல்துறையினரை வீட்டிற்குள் வரவேற்றேன். ஆனால், காவல்துறையினர் இவ்வாறு செயல்பட்டதற்கான காரணம் என்ன? இதற்கு எனக்கு முறையான விளக்கம் தேவை! என்று கூறி பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் திரை துறையை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

