‘96’ நீக்கப்பட்ட காட்சி வெளியீடு : ஜானுவும் ஜானகியும்.. சங்கமம்

‘96’ நீக்கப்பட்ட காட்சி வெளியீடு : ஜானுவும் ஜானகியும்.. சங்கமம்
‘96’ நீக்கப்பட்ட காட்சி வெளியீடு : ஜானுவும் ஜானகியும்.. சங்கமம்

‘96’ திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியிடப்பட்டு, யுடியூப்பில் வைரலாகி வருகிறது.

‘96’ திரைப்படம் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியானது. பள்ளிப் பருவ வாழ்மை கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ராம் மற்றும் ஜானு என்ற பெயர்கள் ரசிகர்களின் மனதில் நின்றது. இதில் த்ரிஷாவின் ஜானு என்ற பெயருக்கு படத்தில் ஒரு காரணம் கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது பாடகி ஜானகியின் பெயரை அவருக்கு சூட்டியதாக கூறப்பட்டிருந்தது. அத்துடன் படம் முழுவதும் ஜானு என்ற கதாப்பாத்திரம் பாடகி ஜானகியின் பாடலை மட்டும் பாடுவதுபோல படமாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ‘96’ நீக்கப்பட்ட காட்சி ஒன்று இன்று வெளியிடப்படும் என நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதேபோல் இன்று காட்சியும் வெளியிடப்பட்டது. அதில், விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் சாலையில் நடந்து செல்லும் போது, த்ரிஷாவின் பெயரை சேதுபதி கேட்க அவர் ஜானு என்கிறார். பின்னர் முழுப்பெயரை கேட்டும் போது ஜானகி தேவி எனக்கூற, இனிஷியலோடு பள்ளியில் கூப்பிடுவதை கூறுமாறு சேதுபதி சொல்கிறார். அதற்கு எஸ்.ஜானகி என த்ரிஷா கூற, உடனே இதுவா என பாரு என்று பாடகி ஜானகியின் வீட்டில் இருக்கும் பெயர்ப்பலகையை சேதுபதி காட்டுகிறார்.

ஆச்சர்யத்தில் த்ரிஷா மூழ்க, அதற்குள் அங்கு ஜானகியின் கார் வந்துவிடுகிறது. ஜானகியின் டிரைவர் இருவரையும் யாரென்று விசாரிக்க, உடனே ஜானகி இருவரையும் வீட்டிற்குள் அழைக்கிறார். உள்ளே சென்றதும், த்ரிஷாவிடம் கலகலப்பாக பேசும் ஜானகி, ஒருபாடலை பாடுமாறு கோருகிறார். 

அப்போது உங்கள் பாடலை தவிர வேறு யார் பாடலையும் இவர் பாடமாட்டார் என த்ரிஷா குறித்து சேதுபதி விளக்கமளிக்கிறார். அதைக்கேட்ட ஜானகி அப்படியெல்லாம் இருக்கக்கூடாது, பாடகராக மாறிவிட்டால் அனைவரது நல்ல பாடல்களையும் பாடவேண்டும் என அன்புக்கட்டளை போடுகிறார். பின்னர் த்ரிஷா பாடல் ஒன்றை பாட, அதில் ஜானகி சில சிறு திருத்தங்களை கூறி அவரும் பாடுகிறார். பின்னர் த்ரிஷாவின் பெயரைக்கேட்கும் ஜானகி, தனது பெயரே த்ரிஷா வைத்திருக்க ஆனந்தமடைகிறார். 

இந்தக் காட்சி தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாடல் பாடுவதில் ஈடு இணையற்ற ஜானகிக்கு, ஏனோ நடிப்பு வரவில்லை என்பது இந்தக் காட்சியை காண்போருக்கு தோன்றுகிறது. இருப்பினும் அவரது குரல் ஆச்சர்ய படவைக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com