ஈழ மக்களின் உயிரைவிட ’800’ படம் பெரிதல்ல: விஜய் சேதுபதிக்கு சேரன் வேண்டுகோள்!
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
@VijaySethuOffl உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது. pic.twitter.com/o0raxEercb
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ’800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதற்கு விசிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பலக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இயக்குநர் சேரன் இன்று தனது ட்விட்டர் பதிவில், ”உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.விட்டுவிடுங்கள்.
உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.