\
Nivin pauly , Mamitha Baiju & Fahadh Faasil
Nivin pauly , Mamitha Baiju & Fahadh FaasilMamitha Baiju Instagram

₹330 கோடி வசூல்.. “எனக்கு அதில் பாதி கூட கிடைக்காது” – ஃபஹத் பாசில் ஓபன் டாக்!

₹330 கோடி வசூல் செய்த Bethlehem Kudumba Unit: ஃபஹத் பாசில் பகிர்ந்த உண்மைகள்!
Published on: 
Summary

‘Bethlehem Kudumba Unit’ திரைப்படம் ₹330 கோடி வசூல் செய்தாலும், அதில் பாதி கூட கிடைக்காது என ஃபஹத் பாசில் தெரிவித்தார். படத்தின் வெற்றியை தனிப்பட்டதாக பார்க்காமல், இயக்குநர் கிரிஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ஷ்யாம், திலீஷ் ஆகியோரின் கூட்டு முயற்சியாக அவர் பாராட்டினார்.

செய்தியளர் - M. மீரா

மலையாள சினிமாவில் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது ‘Bethlehem Kudumba Unit. நிவின் பாலி, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், உலகம் முழுவதும் ₹330 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் வசூல் குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான ஃபஹத் பாசில் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

‘Bethlehem Kudumba Unit’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஓணம் பண்டிகை காலத்தில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியாக மாறியது.

Nivin Pauly & Mamitha Baiju
Nivin Pauly & Mamitha Baiju Mamitha Baiju Instagram

கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சங்கேத் பிரதாப், வினய் ஃபோர்ட், சுரேஷ் கிருஷ்ணா, பிந்து பணிக்கர், ஸ்ரிந்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கிரிஷ் ஏ.டி. மற்றும் கிரண் ஜோசி இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம், அக்டோபர் 2ஆம் தேதி JioHotstar-ல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் உலகளாவிய வசூல் சுமார் ₹330.19 கோடி என்றும், இந்தியாவில் நிகர வசூல் சுமார் ₹164.25 கோடி என்றும் கூறப்படுகிறது.

Nivin Pauly & Mamitha Baiju
Nivin Pauly & Mamitha Baiju Mamitha Baiju Instagram

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் ₹300 கோடியில் எங்களில் யாருக்கும் பாதி கூட கிடைக்காது. அது படத்தின் மொத்த வசூல் (Gross Collection). Bethlehem Kudumba Unit வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று ஃபஹத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வெற்றியை தன்னுடைய வெற்றியாக மட்டும் பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். படத்தின் இயக்குநர் கிரிஷ், தயாரிப்பாளர்கள் ஷ்யாம் மற்றும் திலீஷ் உள்ளிட்ட அனைவரின் கூட்டு முயற்சியால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக ஃபஹத் தெரிவித்துள்ளார்.

Nivin pauly , Mamitha Baiju & Fahadh Faasil
”அப்பாவுக்கு கோவம் வந்தா அவ்வளவு தான்..” அப்பா விஜய் குறித்து ஜேசன் சஞ்சய்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com