Women’s Day | குட்டி ரேவதி To உமா தேவி; தமிழ் சினிமா உலகில் கவனம் ஈர்க்கும் 5 பெண் பாடலாசிரியர்கள்!

தமிழ்த் திரையுலகில் சில அறியப்படாத பெண் பாடலாசியர்கள் 5 பேரைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
பெண் பாடலாசிரியர்கள்
பெண் பாடலாசிரியர்கள்ட்விட்டர்

இன்று எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராய்ப் பெண்கள் வந்து சாதனை படைத்துவிடுவார்கள். இவர்களுடைய பெருமைகளையும் சாதனைகளையும் போற்றுவிதமாக ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடாப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்த் திரையிலகில் இன்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண் பாடலாசிரியர்கள் இருக்கின்றனர்.

சங்ககாலத்திலேயே அவ்வை, மாசாத்தியார் என ஏராளமான பெண் கவிஞர்கள் இருந்த நிலையில், இன்று குறைவாக இருப்பது கவலையளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. எனினும், அவர்கள் கவிதைகள் படைப்பதில் தனி இடம் வகிக்கின்றனர். குறிப்பாக, தமிழ்த் திரையுலகில் ’குங்குமப் பொட்டின் மங்கலம்’ பாடல் எழுதிய பேகம் முதல் பாடலாசிரியர்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த தாமரை வரை என எல்லோருமே தங்களுடைய வசீகர வரிகளால் வசியப்படுத்தியவர்கள். கவிஞர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் தங்களுடைய கவிதைகளில் சிறந்து விளங்கியவர்கள்; திரைப்பாடல்களிலும் சாதித்தவர்கள். எனினும் இவர்களைத் தவிர தங்களுடைய சிறப்பான பாடல் வரிகளை கவனம் ஈர்த்து வரும் பெண் பாடலாசியர்கள் தமிழ்த் திரையுலகில் உலா வருகிறார்கள். அவர்களில் 5 பேரை இந்தக் கட்டுரையில் காண்போம்.

தேன்மொழி தாஸ்:

தேன்மொழி தாஸ்:
தேன்மொழி தாஸ்:

ரோஸ்லின் ஜெயசுதா என்ற தனது இயற்பெயரை தேன்மொழிதாஸ் என்று மாற்றிக்கொண்ட இவர், பாடலாசிரியர் தாமரைக்கு அடுத்து அதிக பாடல்களை எழுதியவர். இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அவரது ’ஈர நிலம்’ படம் மூலமாக பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் அறிமுகமானார். இதன்மூலமாக தமிழ்த் திரைப்பட வரலாற்றில் உரையாடலுக்காக விருது பெற்ற முதல் பெண் என்ற அடையாளத்தையும் பதிவு செய்தார். தொடர்ந்து, ’கண்களால் கைது செய்’, ’அடுத்த சாட்டை’, ’காதலிக்க நேரமில்லை’ உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். ’இசையில்லாத இலையில்லை’, ’அநாதி காலம்’, ’ஒளியறியாக் காட்டுக்குள்’, ’நிராசைகளின் ஆதித்தாய்’, ’காயா’, ’வல்லபி’ உள்ளிட்ட கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

குட்டி ரேவதி

பெண் எழுத்தாளர்களில் பிரபலமானவர் குட்டி ரேவதி. இலக்கியம் தாண்டி, 2006ஆம் ஆண்டு திரைப் பயணத்தில் காலடிவைத்தார். மரியான் படத்தில் அசோசியேட் இயக்குநராகப் பணிபுரிந்த அவர், அப்படத்திலேயே ‘நெஞ்சே எழு’ மற்றும் ‘எங்க போன ராசா’ ஆகிய பாடல்களை எழுதி பாடலாசிரியராகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘மாயா’, ‘8 தோட்டாக்கள்’, ‘அருவி’ ஆகிய படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார்.

குட்டி ரேவதி
குட்டி ரேவதி

’பூனையைப்போல அலையும் வெளிச்சம்’, ’முலைகள்’, ’தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’, ’உடலின் கதவு’, ’யானுமிட்ட தீ’, ’மாமத யானை’, ’இடிந்த கரை’, ’அகவன் மகள்’, ’காலவேக மதயானை’, ’அகமுகம்’ உள்ளிட்ட கவிதை நூல்களையும், ’நிறைய அறைகள் உள்ள வீடு’ என்ற சிறுகதை தொகுப்பையும் ’காலத்தைச் செரிக்கும் வித்தை’ என்கிற கட்டுரை நூல் தொகுப்பையும் அவர் எழுதியுள்ளார். இவர் ஒரு சித்த மருத்துவரும்கூட.

கு.உமாதேவி:

’நான் நீ நாம் வாழவே உறவே’ என ’மெட்ராஸ்’ படத்தில் எழுதத் தொடங்கி, ’கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே’ என ’கபாலி’யில் கலங்கவைத்து, ’வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி ஒண்ணுமில்ல’ என ’காலா’வில் எனத் தொடர்ச்சியாக பா.ரஞ்சித் படங்களில் பாடல் எழுதி பட்டிதொட்டி எங்கும் பெயர் எடுத்தவர் கவிஞர் கு.உமாதேவி. ’கட்டப்பாவைக் காணோம்’, ’தப்புத்தண்டா’, ’ஜி8’ உள்ளிட்ட படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். 96 படத்தில் இவர் எழுதிய இரவிங்கு தீவாய் நமை சூளுதே, தாபங்கலே, வசந்த காலங்கள் பாடங்கள் காதலர்களின் லிஸ்டில் எப்போதும் இருக்கும்.

கு.உமாதேவி
கு.உமாதேவி

‘திசைகளைப் பருகியவர்கள்’ என்ற கவிதை நூல் மூலமாக இவருடைய திரைப் பயணம் அமைந்தது. ’தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது’ என்பது இவருடைய இன்னொரு கவிதை நூல். பிற மொழி கலப்பின்றி தூய தமிழில் பாடல்கள் தருவதையும் மக்கள் விரும்பும் முணுமுணுக்கும் பாடல்களை வரும்காலங்களில் தர வேண்டும் என்பதில் விருப்பமாக உள்ளார். தாப நிலையே, ஒளி பூக்கும் இருளே, வலி தீர்க்கும் வலியாய், மணலூறும் மழையாய் என புதுப்புது தமிழ்ச் சொற்களை தேடிப் பிடித்து பாடல்கள் எழுதியவர். காலாவின் கண்ணம்மா பாடலில் ‘ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே’ என்ற வரிகள் ஆழமான அர்த்தமுடையவை

பெண் பாடலாசிரியர்கள்
Women's Day 2024 | கல்பனா சாவ்லா முதல் ஹெலன் ஷர்மன் வரை... விண்வெளியில் கால்பதித்த 5 சாதனை மகளிர்!

பார்வதி

‘நகுலா’ பாடல் மூலம் ‘வல்லினம்’ படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர் பார்வதி. தொடர்ந்து ‘ஜில்லா’ படத்தில் ‘வெரசா போகையில’ பாடல் மூலம் பலரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர். ‘அமரகாவியம்’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ‘அதே கண்கள்’ என்று அடுத்தடுத்த படங்களுக்கும் பாடல் எழுதி பெண் பாடலாசிரியர்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ’அதே கண்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘போன போக்கில் சொல்லும் சின்ன வார்த்தையே’ பாடல், இன்றும் பலரை முணுமுணுக்க வைத்திருப்பதோடு, பார்வதியைப் பட்டிதொட்டி என எங்கும் போய்ச் சேர்த்திருக்கிறது.

பார்வதி
பார்வதி

தமயந்தி

சிறுகதை எழுத்தாளராக அறியப்பட்ட தமயந்தி, ‘விழித்திரு’ படம் மூலம் முதல் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். ’ஒருநாள் கூத்து’, ’கரிச்சான் குருவி’ ’கொலைகாரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ’காயல்’ என அடுத்தடுத்த படங்களுக்கும் பாடல் எழுதினார். இதில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ இடம்பெற்ற மைலாஞ்சி பாடல், இன்றும் இளசுகளை முணுமுணுக்க வைத்தப்படியே இருக்கிறது. தான் எழுதிய ‘தடயம்’ என்கிற சிறுகதையை அதே தலைப்பில் குறும்படமாக்கி இயக்குநராகவும் அடியெடுத்துவைத்த தமயந்தி, ‘காய’லை முளுநீள படமாக இயக்கியிருந்தார்.

தமயந்தி
தமயந்தி

’அக்கா குருவிகள்’, ’முற்பகல் ராஜ்ஜியம்’, ’சாம்பல் கிண்ணம்’, ’வாக்குமூலம்’ உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளையும், ’நிழலிரவு’ என்கிற நாவலையும், ’இந்த நதி நனைவதில்லை’ என்கிற கட்டுரைத் தொகுப்பையும் எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com