\
ramayana
ramayana Ramayana Trailer you tube Screenshot

ரூ.4000 கோடி பிரம்மாண்டம்; ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த ராமாயணா!

முன்பதிவு வசூலில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சாதனை படைத்துள்ளது ராமாயணா திரைப்படம்.
Published on: 
Summary

ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம், ரிலீசுக்கு முன்பே ரூ.85 கோடி முன்பதிவு வசூல் சாதனை படைத்துள்ளது. ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

செய்தியாளர் - M.மீரா

ரன்பீர் கபூர், யாஷ் , சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், உலகம் முழுவதும் முன்பதிவு வசூலில் ரூ.85 கோடியை நெருங்கி வருகிறது. இந்தியாவில் மட்டும் முதல் நாள் டிக்கெட் முன்பதிவில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இந்தியாவின் இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். யாஷ் ராவணனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர்.

500 Jewels, 18 Months, 3 Kingdoms: Ramayana's Grand Designs
Sai PallaviRamayana Trailer you tube Screenshot

சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் முதல் பாகம் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக முன்பதிவு வசூலும் கவனம் ஈர்த்து வருகிறது.

தொழில்துறை வசூல் கண்காணிப்பு நிறுவனமான Sacnilk வெளியிட்டுள்ள தகவலின்படி, நவம்பர் 2ஆம் தேதி காலை 11 மணி நிலவரப்படி, இந்தியாவில் முதல் நாள் காட்சிகளுக்கான முன்பதிவில் இப்படம் ரூ.25.77 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தியாவில் முதல் நான்கு நாட்களுக்கான முன்பதிவில் இதுவரை ரூ.47.62 கோடி வசூல் கிடைத்துள்ளது.

Ramayana
RamayanaRamayana Trailer you tube Screenshot

வெளிநாடுகளிலும் படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு முன்பதிவில் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.33.20 கோடி வசூலாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்த்து படத்தின் மொத்த முன்பதிவு வசூல் ரூ.80.8 கோடியை எட்டியுள்ளது.

முதல் நாள் முன்பதிவு வசூலில் யாஷின் சொந்த மாநிலமான கர்நாடகா ரூ.4.84 கோடி பங்களிப்புடன் முன்னிலையில் உள்ளது. மகாராஷ்டிராவில் ரூ.4.82 கோடியும், டெல்லியில் ரூ.3.68 கோடியும் வசூலாகியுள்ளது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், திரையரங்குகளில் வெளியாகும்போது எந்த அளவுக்கு வசூல் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ramayana
’கல்யாண மேடையில் பாடிய யுவன் சங்கர் ராஜா..’ ரசிகர்கள் அதிர்ச்சி!