“சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன்” - ப்ரேக் அப் பற்றி ஸ்ருதிஹாசன்  

“சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன்” - ப்ரேக் அப் பற்றி ஸ்ருதிஹாசன்  

“சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன்” - ப்ரேக் அப் பற்றி ஸ்ருதிஹாசன்  
Published on

காதல் முறிவு தனக்கு எந்த வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் தனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்ததாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலித்து வந்தார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தன் காதலை முறித்துக்கொண்டார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட ஸ்ருதிஹாசன், புதிய அத்தியாயம் தொடங்குகிறது எனக்குறிப்பிட்டார். அதேபோல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மைக்கேல், நாங்கள் தனித்தனி பாதையில் பயணிக்க உள்ளோம் எனத் தெரிவித்தார். 

இந்நிலையில் அது குறித்து பொதுவெளியில் பேசாதிருந்த ஸ்ருதிஹாசன், முதன்முதலாக தன் காதல் முறிவு குறித்து பேசியுள்ளார். தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனிடம் காதல் முறிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்குப் பதில் அளித்த அவர்,காதலுக்கு இது தான் விதி என்றும் எதுவும் இல்லை. நல்லவர்கள் சில நேரங்களில் நல்லவர்கள், அதே நபர்கள் சில நேரங்களில் மோசமானவர்கள். காதல் முறிவால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

நான் நிறைய கற்றுக்கொண்டேன், அது ஒரு கற்றல் அனுபவம்தான். நான் ஒரு சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன். அது கிடைத்தால், மகிழ்ச்சியாக உங்களிடம் நான் பகிர்ந்துகொள்வேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com