"நன்றியும் அன்பும்"- திருமண உறவிலிருந்து வெளியேறிய நடிகை

பெண்கள் எடுக்கும் முடிவுக்கு பெண்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அப்படி ஒரு பெண் தைரியமாக ஒரு முடிவை எடுத்து இருந்தால் அதன்பின் பலமான காரணம் ஒன்று இருக்கும்.
நடிகை ஷீலா
நடிகை ஷீலாPT

பெண்கள் எடுக்கும் முடிவுக்கு பெண்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அப்படி ஒரு பெண் தைரியமாக ஒரு முடிவை எடுத்து இருந்தால் அதன்பின் பலமான காரணம் ஒன்று இருக்கும்.

திரை உலகில் கணவன் மனைவி பிரிவு என்பது சகஜமாகிவிட்ட நிலையில், இன்று சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை ஷீலா ராஜ்குமார், தான் திருமண பந்தத்தை விட்டு விலகுவதாக தனது X பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். யார் இந்த ஷீலா ராஜ்குமார்? எதற்காக இந்த முடிவு?

ஷீலா ராஜ்குமார் இவர் வளர்ந்து வரும் தமிழ் நடிகை. இவர் இன்று தனது வலைதளபக்கத்தில் ”திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன்” என்ற செய்தி ஒன்றை பகிர்ந்திருந்தார். அது ரசிகர்களிடையே அதிர்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான ஆறுவது சினம் படத்தின் மூலமாக திரைத்துறையில் கால் பதித்தவர் ஷீலா ராஜ்குமார். இதைத்தொடர்ந்து அசுரவதம், ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ன்னு சில படங்கள்ல தொடர்ந்து நடித்துவந்தவர் 2018-ல் ஒரு தனியார் தொலைக்காட்சியில அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து சினிமாதுறையில் டூ லெட், திரௌபதி, மண்டேலா, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ் ன்னு பல தமிழ் படங்கள் ரசிகர்களிடையே அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதில் திரௌபதி படத்தில் நடித்தபோது, உதவி இயக்குனரும் நடிப்பு பயிற்சி கொடுப்பவருமான சோழன் என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர்.

திரௌபதி படம் முடிந்ததும், அடுத்த சில மாதங்களில் வித்தியாசமான முறையில் கடலின் நடுவில் ஒரு படகில் தனது காதலனை கரம்பிடித்தார் ஷீலா. வித்தியாசமான இவரது திருமணப் புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.

இந்நிலையில் சற்று முன் சமூக வலைதளத்தில் ஷீலா அவரது கணவரை tag செய்து திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன், நன்றியும் அன்பும்ன்னு பதிவிட்டு இருப்பது ரசிகர்களின் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com