நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - வங்கி சட்டம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - வங்கி சட்டம்கோப்புப்படம்

நாமினி நியமன சட்ட திருத்தம் சொல்வதென்ன?

நாமினி நியமன சட்ட திருத்தம் சொல்வதென்ன? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
Published on

செய்தியாளர்: கௌசல்யா

வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட நிதி தொடர்பான கணக்குகளில் நாமினி எனப்படும் நியமனதாரரை நியமிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

சொத்தின் உரிமையாளர் தனது கணக்கில் ஒரு நாமினியை சேர்ப்பது இப்போதுள்ள நடைமுறை. ஆனால், சில நேரங்களில் உரிமையாளருக்கு முன்னரே நாமினி உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனால் உரிமையாளரின் கணக்குகளில் உள்ள தொகையை பெறுவதில் குடும்பங்கள் பெரும் சட்டசிக்கலை எதிர்கொள்கின்றன. சட்டப்பிரச்னை வரக்கூடும் என்பதாலேயே வங்கி உள்ளிட்ட நிதிநிறுவனங்களும் தொகையை யாரிடம் வழங்குவது என முடிவெடுக்க இயலாமல் கைவிரித்து விடுகின்றன. இதனால், வங்கிகளில் ஆண்டுக்கு ஆண்டு உரிமை கோரப்படாத தொகை அதிகரித்து வருகின்றன.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - வங்கி சட்டம்
பங்கு சந்தையில் சரிவை கண்ட வணிகம், ஏற்றத்தைக் கண்ட தங்கத்தில் விலை; புதிய உச்சத்தைத் தொட்ட வெள்ளி!

2023ஆம் ஆண்டு வரை உரிமை கோரப்படாத சொத்துகளின் மதிப்பு 62,225 கோடியாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 78,213 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

நாமினி நியமன சட்டத்திருத்தம் சொல்வதென்ன?

நாமினி நியமன சட்டத்திருத்ததின்படி, முதலீடு தொடர்பான கணக்குகளில் அதிகபட்சம் 4 நாமினிகளை நியமிக்கலாம். அந்தவகையில், மியூச்சுவல் ஃபண்ட், டிமேட் கணக்குகள், காப்பீட்டு திட்டங்களிலும் 3 நாமினிகளை நியமிக்கலாம். வங்கிக் கணக்கிற்கு 4 நாமினிகள் வரை நியமிக்கலாம் என சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், மனைவி நியமனதாரர் என்ற வகையில் உரிமையாளர் மரணமடைந்தால் 100 சதவிகித தொகையையும் மனைவி பெற்றுக்கொள்ள முடியும். கணவருக்கு முன் மனைவி இறக்க நேரிட்டால் அடுத்த நாமினியாக மகன் கருதப்படுவார். ஒருவேளை தாய், மகன் ஆகியோர் உயிரிழக்க நேரிட்டால் மகள் நாமினியாக கருதப்படுவார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - வங்கி சட்டம்
3 நகராட்சிகளுக்கு ரூ. 990 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை... அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

உதாரணத்திற்கு, தனது சொத்துகளில் 50 சதவிகிதம் மனைவிக்கும், மீதமுள்ள 50 சதவிகிதத்தை சரிபாதியாக மகன், மகளுக்கு பகிர்ந்து பதிவு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது, கணவர் இறப்பதற்கு முன் நாமினிகளில் யார் இறந்தாலும், அவரது பங்கு மற்ற இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com