தக்காளி வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் குறைந்தது தக்காளி விலை

தக்காளி வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் குறைந்தது தக்காளி விலை

தக்காளி வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் குறைந்தது தக்காளி விலை

கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து இருப்பதால் இன்றும் அங்கு தக்காளி விலை சற்று குறைந்து இருக்கிறது.

கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலத்தில் இருந்து சரக்குகள் கூடுதலாக வரத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, சட்டீஸ்கர் ஆகிய வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் கோயம்பேடு சந்தைக்கு இன்று 50 லாரிகளில் தக்காளி வரத்து இருந்துள்ளது. இதனால் இன்று தக்காளி விலை சற்று குறைந்து இருக்கிறது. நாட்டு தக்காளி முதல் ரகம் கிலோ 60 ரூபாய்க்கும், கோயம்பேடு சந்தையில் பொதுமக்களுக்கு நேரடியாக சில்லறை விற்பனையில் 80 ரூபாய்க்கு கிடைக்கும். இரண்டாம் ரகம் கோயம்பேடு சந்தையில் கிலோ 50 ரூபாய்க்கு கிடைப்பதில், பொதுமக்களுக்கு சில்லறையாக 70 ரூபாய்க்கு கிடைக்கும்.

போலவே தக்காளி கோயம்பேடு சந்தையில் முதல் ரகம் 50 ரூபாய். பொதுமக்களுக்கு நேரடி விற்பனையில் 70 ரூபாய். இரண்டாம் ரகம் கோயம்பேடு சந்தையில் 40 ரூபாய், பொதுமக்கள் நேரடியாக பெறும்போது 60 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று கிலோ 64 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 34 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளிலும் தேவையான தக்காளி கையிருப்பில் இருப்பதாகவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் இன்னும் சில நாட்களில் தக்காளி வரத்து சென்னைக்கு வரத் தொடங்கினால் கோயம்பேடு மார்க்கெட்டில் விலை வெகுவாக குறையும் என தக்காளி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com