பங்கு சந்தை
பங்கு சந்தை புதிய தலைமுறை

கருத்துக்கணிப்பு எதிரொலி - புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தை!

தேர்தல் முடிவின் கருத்துக்கணிப்பின்படி மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுவதால், இன்று தொடக்கமே பங்குசந்தைகள் புதிய உச்சத்தை எட்டி இருக்கின்றன.

தேர்தல் முடிவின் கருத்துக்கணிப்பின்படி மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுவதால், இன்று தொடக்கமே பங்குசந்தைகள் புதிய உச்சத்தை எட்டி இருக்கின்றன. அதன்படி நிப்டி 600 புள்ளிகளும், சென்செஸ் 2000 புள்ளிகளும் அதிகரித்து வர்த்தகமானது நடைபெற்று வருகிறது.

கடந்த வார முடிவில் தேசிய பங்கு சந்தை (நிப்டி) 22,530.70 புள்ளியுடன் வர்த்தகமானது முடிவடைந்த நிலையில், இன்று 23,337.90 புள்ளிக்கு வர்த்தகம் தொடங்கியது.

பங்கு சந்தை
விருதுநகர் | மோடி பிரதமராகவும், ராதிகா வெற்றிபெறவும் வேண்டி சரத்குமார் அங்கப்பிரதட்சணம்!

அதே போல மும்பை பங்கு சந்தை (சென்செஸ்) 73,961.31 முடிந்த நிலையில் இன்று 76,583.29 புள்ளிகளில் வர்த்தகமானது தொடங்கி நடந்துக்கொண்டு வருகிறது.

தேர்தல் முடிவு கருத்து கணிப்பின்படி மீண்டும் மத்தியில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டதால் அதன் கொள்கையில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என்று பங்கு சந்தைகளை சேர்ந்தவர்கள் நம்புகிறார்கள்.

இதன் காரணமாகதான் முதலீட்டாளர்கள் புதிய உற்சாகத்துடன் பங்குகளை வாங்கி வருகிறார்கள். இதனால் பங்கு சந்தையில் விறுவிறுப்பு ஏற்பட்டு வருகிறது.

ஏற்கெனவே அதானி போன்றோரின் பங்குகள் குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது நடைபெற்று வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com