நிச்சயமற்ற அரசியல் சூழல்... தமிழகத்தின் உற்பத்தித் துறை வளர்ச்சி குறைவு

நிச்சயமற்ற அரசியல் சூழல்... தமிழகத்தின் உற்பத்தித் துறை வளர்ச்சி குறைவு

நிச்சயமற்ற அரசியல் சூழல்... தமிழகத்தின் உற்பத்தித் துறை வளர்ச்சி குறைவு
Published on

தமிழகத்தில் உற்பத்தித்துறை வளர்ச்சி 1.65 சதவீதமாக குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் 10.36 சதவீதமும், தெலங்கானாவில் 7.1 சதவீதமும் உற்பத்திதுறை வளர்ச்சியடைந்துள்ளன. கடந்த 2014-15 மற்றும் 2015-16ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உற்பத்திதுறை 7.11 சதவீதம் வளர்ச்சியடைந்திருந்தது. ஆனால் 2016-17ல் உற்பத்திதுறை வளர்ச்சி 1.65 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் நிச்சயமற்ற சூழலே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என தெரிகிறது. தமிழகத்தில் தலைசிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும் அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com