2021-இல் இரண்டு லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் : மாருதி சுஸுகி!

2021-இல் இரண்டு லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் : மாருதி சுஸுகி!
2021-இல் இரண்டு லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் : மாருதி சுஸுகி!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த 2021-இல் மட்டுமே சுமார் இரண்டு லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரே ஆண்டில் இரண்டு லட்சம் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது இதுவே முதல்முறை எனவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. 

மொத்தம் 2,05,450 கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தனது அறிக்கையில் மாருதி தெரிவித்துள்ளது. 

“உலகம் முழுவதும் உள்ள எங்களது வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி கார்களின் தரம், தொழில்நுட்பம், நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் மீது வைத்துள்ள நம்பிக்கையை இந்த மைல்கல் பிரதிபலிக்கிறது. இந்த சவாலான காலகட்டத்தில் எங்களுக்கு ஆதரவு கொடுத்த உலகம் முழுவதுமுள்ள விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி” என மாருதி சுஸுகி இந்தியா நிர்வாக இயக்குனர் Kenichi Ayukawa தெரிவித்துள்ளார். 

மாருதி நிறுவனம் மொத்தம் 15 மாடல் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அதில் Baleno, Dzire, Swift, S-Presso மற்றும் Brezza ஆகிய ஐந்து கார்கள் அதிகளவில் 2021-இல் ஏற்றுமதியாகி உள்ளன. மாருதி நிறுவனம் கடந்த 1986-87 வாக்கில் வாகனங்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியது. முதன்முதலில் ஹங்கேரி நாட்டுக்கு கார்களை ஏற்றுமதி செய்திருந்தது மாருதி. உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளுக்கு கார்களை மாருதி ஏற்றுமதி செய்து வருகிறது. மொத்தம் 21.85 லட்சம் கார்கள் இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com