டாப் வணிகச் செய்திகள் - 2024 |ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை To வங்கிகளில் குறைந்த வாராக்கடன்!
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!
இந்தியப் பங்குச்சந்தைகள் 2024ஆம் ஆண்டில் சிறிய ஏற்றத்துடனே காணப்பட்டன. மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 2024 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 5 ஆயிரத்து 898 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. இதே காலங்களில் தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டியும் ஆயிரத்து 913 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
அதேபோல, 2024ல் இதுவரை இல்லாத அளவாக சென்செக்ஸ் 85 ஆயிரத்து 978 புள்ளிகளையும், நிஃப்டி 26 ஆயிரத்து 277 புள்ளிகளையும் தொட்டன. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 74.34 டாலரில் வர்த்தகமானது.
வங்கிகளில் வாராக்கடன்!
வங்கிகளில் வாராக்கடன் 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதனால் வங்கிகளின் சொத்துமதிப்பு அதிகரித்திருப்பதாகவும் கூறியிருக்கிறது. வங்கிகளில் வாராக்கடன் செப்டம்பரில் 2.6 சதவிகிதமாக குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
அதேநேரம், தனியார் வங்கிகளில் WRITE-OFF எனப்படும் "திரும்ப வராது" எனக் கூறப்படும் தொகையை இழப்பாக கணக்கீடு செய்வது அதிகரித்து வருவது கவலை தருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கடன் வாங்குவதற்கான தேவை அதிகமாக இருப்பதையடுத்து 37 வங்கிகளில் வாராக்கடன் குறைந்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.