\
PF தொகை
PF தொகைமுகநூல்

உங்கள் PF தொகை எங்கெல்லாம் முதலீடு செய்யப்படுகிறது தெரியுமா? மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம்!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை, வருங்கால வைப்பு நிதி ஆணையம் எங்கெல்லாம் முதலீடு செய்கிறது என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Published on

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, வருங்கால வைப்பு நிதி ஆணையம், தன் வசமுள்ள PF தொகையை கடன் பத்திரங்களிலும் Exchange Traded Funds மூலம் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்கிறது. மத்திய அரசு வழங்கியுள்ள முதலீட்டு வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முதலீட்டை அது மேற்கொள்கிறது.

2024 மார்ச் மாத நிலவரப்படி, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வசம் 24.75 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. இவற்றில் 22.40 லட்சம் கோடி ரூபாய் கடன் பத்திரங்களுக்கும் 2.35 லட்சம் கோடி ரூபாய் Exchange Traded Funds வழியாக பங்குச் சந்தை முதலீட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

PF தொகை
மத்தியப் பிரதேசம்: ரயில் சக்கரங்களுக்கு நடுவே 250 கி.மீ தூரம் பயணம்.. காரணத்தால் அதிர்ந்த ஊழியர்கள்!

வருங்கால வைப்பு நிதி அலுவலகம் Exchange Traded Funds மூலம் 2017 -18 நிதி ஆண்டில் 22 ஆயிரத்து 766 கோடி ரூபாய், 2018-19இல் 27 ஆயிரத்து 974 கோடி ரூபாய், 2019-20இல் 31 ஆயிரத்து 501 கோடி ரூபாய், 2020-21இல் 32 ஆயிரத்து 070 கோடி ரூபாய், 2021-22இல் 43 ஆயிரத்து 568 கோடி ரூபாய், 2022-23இல் 53 ஆயிரத்து 81 கோடி ரூபாய், 2023-24 இல் 57 ஆயிரத்து 184 கோடி ரூபாய், 2024 - 25 இல் (அக்டோபர் வரையில்) 34 ஆயிரத்து 207 கோடி ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளது. நேரடியாக எந்தக் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளில், வருங்கால வைப்பு நிதி முதலீடு செய்யப்படுவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com