வணிகம்
அக்டோபர் 9 முதல் அடுத்த கட்ட தங்கப்பத்திரத் திட்டம்: நிதி அமைச்சகம் அறிவிப்பு
அக்டோபர் 9 முதல் அடுத்த கட்ட தங்கப்பத்திரத் திட்டம்: நிதி அமைச்சகம் அறிவிப்பு
தங்கப்பத்திரத் திட்டத்தின் அடுத்த கட்டம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், அடுத்தகட்ட தங்கப்பத்திரத் திட்டம் அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் இத்திட்டத்தில் முதலீட்டுக்கான விண்ணப்பங்களை வங்கிகள், குறிப்பிட்ட அஞ்சலக கிளைகளில் வாங்கலாம். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கிராம் முதல் 500 கிராம் வரை ஒரு நபர் பத்திர வடிவில் தங்கத்தை வாங்க முடியும். குறிப்பிட்ட காலத்திற்கு பின் தங்க விலையேற்றத்தின் ஆதாயத்தை பண வடிவில் பெற முடியும். இத்திட்டத்தில் தங்கப்பத்திரம் வாங்குபவர்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டியும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.