தங்கம் விலை உயர்வு
தங்கம்புதிய தலைமுறை

’அடேங்கப்பா..’ 2025-ம் ஆண்டு மட்டும் ரூ.43,000 உயர்ந்த தங்கம் விலை!

தங்கம் விலை 2025ஆம் ஆண்டில் மட்டும் 43 ஆயிரம் ரூபாய் அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Published on
Summary

2025ஆம் ஆண்டில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000 உயர்ந்துள்ளது. தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை ஏற்றம் காரணமாக மக்கள் கவலையில் உள்ளனர்.

’இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’ என்ற வசனத்திற்கு ஏற்ப 2025ஆம் ஆண்டு தங்கம் விலை ஏறிய வண்ணமே இருந்துவருகிறது. எப்போதும் இல்லாத வகையில் சவரன் தங்கம் விலை ரூபாய் 1 லட்சத்தை கடந்து ஷாக் கொடுத்துள்ளது.

தங்கம்
தங்கம்web

நடப்பு ஒரு ஆண்டில் மட்டும் மொத்தமாக தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 43ஆயிரம் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தங்கம் விலை உயர்வு
வீட்டில் எவ்வளவு தங்கம் வைக்கலாம்.. ஆண்களுக்கு எவ்வளவு? பெண்களுக்கு எவ்வளவு? விதிமுறைகள் இதான்!

ஆண்டின் முதல் நாளில் தங்கம் விலை சவரனுக்கு 57 ஆயிரத்து 200 ரூபாயாகஇருந்தது. அதே மாதம் 15ஆம் தேதி இது 58ஆயிரத்து 720ஆக அதிகரித்தது. பிப்ரவரி15ஆம் தேதி இது 63 ஆயிரத்து 120ஆகவும், மார்ச் 15ஆம் தேதி 65 ஆயிரத்து760ஆகவும் உயர்ந்தது. ஏப்ரல் 15இல் இது69 ஆயிரத்து 760 என்ற விலையைதொட்டது. எனினும் மே மாதம் சற்றே குறைந்த தங்கம் விலை 68 ஆயிரத்து 880ஆக இருந்தது. தங்கம் விலை ஜூனில் 74 ஆயிரத்து 440ஆகவும் ஜூலையில் 73ஆயிரத்து 160ஆகவும் இருந்தது.

ஆகஸ்ட்மாதம் 74 ஆயிரத்து 240ஆக அதிகரித்த தங்கம் விலை, செப்டம்பரில் 80 ஆயிரத்து960ஆக இருந்தது. அக்டோபரில் தங்கம்விலை 94 ஆயிரத்து 880ஆக உயர்ந்தாலும் நவம்பரில் அது சற்றே குறைந்து 92ஆயிரத்து 400 ஆனது. எனினும் கடந்த ஒருமாதத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்ததங்கம் விலை தற்போது ஒரு லட்சம்ரூபாயை தொட்டு மலைக்கவைத்துள்ளது.

தங்கம் விலை உயர்வு
ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.. இதுதான் காரணம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com