தங்கம் விலை
தங்கம் விலைமுகநூல்

தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயர்வு.. எவ்வளவு விற்பனை தெரியுமா?

தங்கம் விலை இன்று சவரனுக்கு 1520 ரூபாய் உயர்ந்துள்ளது.
Published on
Summary

தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, இன்று சவரனுக்கு 1520 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் விலை குறைந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை ஏறுமுகமாக மாறியுள்ளது. விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

கடந்த ஜனவரி 29ஆம் தேதி, எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. அன்று மட்டும், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற அடுத்த உச்சத்தைத் தொட்டது. ஆனால் அடுத்து வந்த நாட்களில் தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்தது.

what reason of Gold Sales Slump in India
தங்கம்web

இந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர ஆரம்பித்த நிலையில், இன்று சவரனுக்கு 1520 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை
தங்கத்தின் விலையை குறைக்கவைத்த ஒற்றை நபர்... யார் இந்த கெவின் வார்ஷ்..?

ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு கொள்கைகள், வெனிசுலா மீதான படையெடுப்பு, ஈரான் உடனான போர்ச் சூழல் உள்ளிட்டவை தங்கம், வெள்ளி முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்தது. அதிலும், கடந்த ஜனவரி 29ஆம் தேதி, எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. அன்று மட்டும், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற அடுத்த உச்சத்தைத் தொட்டது. ஆனால் அடுத்து வந்த நாட்களில் தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்தது.

gold price rate again increase in today
தங்கம் web

இந்தசூழலில் இந்த வாரம் மீண்டும் தங்கம் விலை ஏறுமுகமாக மாறியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று மேலும் 1520 ரூபாய் உயர்ந்திருக்கும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,18,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.190 உயர்ந்து ரூ.14,790க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.1,520 உயர்ந்து விற்பனையாகிறது. மேலும் தங்கம் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை
கடந்த வாரம் சரிவு.. இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com