Kevin Warsh - Gold Price Fown
Kevin WarshGold Price Fown

தங்கத்தின் விலையை குறைக்கவைத்த ஒற்றை நபர்... யார் இந்த கெவின் வார்ஷ்..?

கெவின் வார்ஷ் என்ற அமெரிக்காவை சேர்ந்தவர் நபர் தங்கத்தின் விலை குறைவுக்கு காரணமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.
Published on
Summary

கெவின் வார்ஷ் அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால், தங்கத்தின் விலை குறைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தை அமெரிக்க பங்கு சந்தை மற்றும் டாலர் பத்திரங்களில் செலுத்தினர். இந்தியாவில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 14,720 ரூபாய் குறைந்தது.

கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை திடீர் என அதிகரித்து வந்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவு பல மடங்கு அதிகரித்தது. இது சர்வதேச அரங்கில் பெரும் அசாதாரண நிகழ்வாக பார்க்கப்பட்டது.

தங்கம் விலை இந்த அளவு அதிகரித்ததற்கு ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கணிக்க முடியாத செயல்பாடு ஆகியவையே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பு போன்ற மிரட்டல் காரணமாக சீனா உள்ளிட்ட நாடுகள் டாலரின் மேல் இருந்த நம்பிக்கையை இழந்து, தங்களிடமிருந்த அமெரிக்க பத்திரங்களை முன்னெப்போதும் இல்லாத அளவு விற்பனை செய்து, அதற்க்கு பதில் தங்கத்தை வாங்கி குவித்தன. இந்தியாவும் கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 77 டன் தங்கத்தைச் சேர்த்தது.

Trump favours pakistan ahead of India
TRUMPpt
Kevin Warsh - Gold Price Fown
நேற்று உயர்வு.. இன்று குறைவு.. கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை மாற்றங்கள்!

இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளால் அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்பட்டு டாலரின் மதிப்பு குறைந்த நிலையில், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான அறிகுறிகளும் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனால் டாலருக்கு மாற்றான பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி அதில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். சர்வதேச அரங்கில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைய இந்த நிகழ்வே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக கெவின் வார்ஷ் தேர்வு செய்யப்படலாம் என்ற செய்தி வெளியானது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகமாக வைப்பதில் ஆர்வம் கொண்ட கெவின் வார்ஷ் குறித்த இந்த செய்தி முதலீட்டாளர்களுக்கு டாலரின் மீதான நம்பிக்கையை அதிகரித்தது.

Kevin Warsh - Gold Price Fown
ஈரானுக்குப் பறக்கும் எச்சரிக்கை.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடிப் பதிவு!

இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தங்கள் கவனத்தை அமெரிக்க பங்கு சந்தையிலும், டாலர், அமெரிக்க அரசு பத்திரங்களிலும் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை குறையத்தொடங்கிய நிலையில், அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக கெவின் வார்ஷ் தேர்வு செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்த நிலையில், இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரே நாளில் 14,720 ரூபாய் குறைந்தது. அதே போல டாலரின் மீதான நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் முதலீட்டாளர்கள் இந்த சாதக சூழலை பயன்படுத்தி தங்களிடம் இருந்த தங்கத்தை விற்பனை செய்யத்தொடங்கியதும் தங்கத்தின் விலை குறைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் டிரம்ப் திடீரென ஏதும் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கினால் சர்வதேச பொருளாதார சூழல் மாறி தங்கத்தின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com