Private Companies Accumulate Gold as Prices Climb
தங்கம் விலை பெருமளவு குறைய வாய்ப்புpt web

’குஷி செய்தி..’ ரூ.40,000 குறையும் தங்கம் விலை..? 80ஆயிரத்துக்கும் கீழ் குறைய வாய்ப்பு!

சர்வதேச அரசியல் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் விற்பனை போக்கால் தங்கம் விலை தலைகீழாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
Published on
Summary

சர்வதேச அரசியல் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் விற்பனை போக்கால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதால், தங்கத்தின் விலை ரூ. 80,000 முதல் ரூ. 90,000 வரை குறையலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

சமீபகாலமாக விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது மெல்ல மெல்லக் குறையத் தொடங்கயிருக்கிறது.. முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்திய தங்கத்தின் விலை வீழ்ச்சி, வரும் மாதங்களில் 80ஆயிரம் வரை குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது..

குறிப்பாக ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தங்கம் விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது அவர்களை குஷிப்படுத்தும் விதமாக இந்த அப்டேட் வெளியாகியுள்ளது.

what reason of Gold Sales Slump in India
தங்கம்web

சர்வதேச அரசியல் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் விற்பனை போக்கு இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

Private Companies Accumulate Gold as Prices Climb
தொடர் சரிவில் தங்கம்.. 4 நாட்களில் அதிரடி மாற்றம்.. இன்றைய விலை நிலவரம் என்ன?

விலை குறையுமா?

ரஷ்யா - உக்ரைன் அதே போல இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய காலம் முதல், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இதுவே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது..

ஆனால், தற்போது போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தூதரகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருவதால் சர்வதேச பொருளாதார சந்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. போர் பதற்றம் குறையும் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று விட்டு மற்ற பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதுவே தங்கத்தின் விலைச் சரிவுக்கு வழிவகுத்துள்ளது.

Russia -Ukraine war
Russia -Ukraine war web

லட்சத்தை தொட்டிருந்த தங்கம் விலையால் கவலையில் இருந்து வந்த ஏழை மக்களுக்கு இந்தச் செய்தி ஒரு சிறிய ஆறுதலைத் தந்துள்ளது.

Private Companies Accumulate Gold as Prices Climb
தங்கத்தின் விலையை குறைக்கவைத்த ஒற்றை நபர்... யார் இந்த கெவின் வார்ஷ்..?

எவ்வளவு குறையும் ?

உலக பொருளாதார சந்தை நிபுணர்களான அனுஜ் குப்தா மற்றும் அமித் கோயல் ஆகியோரின் கணிப்புப்படி, வரும் மாதங்களில் தங்கம் விலை ரூ. 80,000 முதல் ரூ. 90, 000 கீழ் வர வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர்..

அதே சமயம் அமெரிக்காவுடனான மோதல் போக்கால் டாலரின் பயன்பாட்டை பெருமளவு ரஷ்யா குறைத்திருந்தது.. தற்போது அமைதி பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் சர்வேதச வர்த்தகத்தில் மீண்டும் அமெரிக்க டாலரை பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அதே போல் டாலரின் தேவைக்காக தங்கத்தை ரஷ்யா விற்கும் என்பதால் தங்கம் விலை பெருமளவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுக்கிறது.

Private Companies Accumulate Gold as Prices Climb
மெட்டாவின் ரகசியங்கள் லீக்.. 20 வயது பெண் தொடர்ந்த வழக்கு.. ஜுக்கர்பெர்க்கை திணறடித்த கேள்விகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com