ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம்; காரணம் என்ன?

இன்று தங்கத்தின் விலை தடாலடியாக சவரன் ரூ.1,520 குறைந்து ஒரு சவரன் 53,200 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் 190 ரூபாய் குறைந்து 6650 க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை குறைவு
தங்கம் விலை குறைவுPt

இன்று தங்கத்தின் விலை தடாலடியாக சவரன் ரூ.1,520 குறைந்து ஒருசவரன் 53,200 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் 190 ரூபாய் குறைந்து 6,650 க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ரூ.4.50 காசுகள் குறைந்து கிராம் ஒன்று 96 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்
தங்கம்

கடந்த 18 மாதங்களாக தங்கத்தின் விலையானது படிப்படியாக அதிகரித்து வந்தது அனைவரும் அறிந்ததே... இதற்கு காரணம் உக்ரைன் ரஷ்யா போர், பங்கு சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி என்று பல கூறப்பட்டன. அதேநேரம் சீனா மற்றும் ரஷ்யா போன்ற வசதிபடைத்த நாடுகள் கையிருப்பாக தங்கத்தை அதிகளவில் வாங்கி வந்ததாலும் தங்கத்தின் விலையானது கணிசமாக உயர்ந்து வந்தது.

தங்கம் விலை குறைவு
தங்கம், வெள்ளி விலை உயர்வு... இனி தொடர்ந்து அதிகரிக்குமா?

இந்நிலையில் திடீரென்று சீனா தங்கத்தை வாங்குவதை நிறுத்தியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அவுன்ச் ஒன்றுக்கு 83 டாலர்கள் சரிந்து 2,293 டாலராக விற்பனையானது. இந்த விலை இறக்கமானது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் தங்கத்தின் விலையானது ஒரே நாளில் கணிசமாக குறைந்துள்ளது.

மேலும் அமெரிக்க பொருளாதாரமும் சற்று உயர்ந்து வருவதாலும், தங்கத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. வருகின்ற நாட்களில் தங்கத்தின் விலை மேலும் சற்று குறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com