வணிகம்
தங்கம் விலையில் அதிரடி சரிவு.. சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது
தங்கம் விலையில் அதிரடி சரிவு.. சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 குறைந்து ரூ.40,104-க்கு விற்பனை ஆகிறது.
நாளுக்கு நாள் தங்கம் விலை கூடிக்கொண்டே சென்று உச்சத்தை அடைந்தது. கடந்த 7-ஆம் தேதி 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் 43,328க்கு விற்பனை ஆனது. இதையடுத்து தொடர்ந்து தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 குறைந்து ரூ.40,104 க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 229 சரிந்து ரூ.5,013க்கு விற்பனை ஆகிறது.