ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 624 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 32ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் இறங்கியுள்ளது.
நடப்பு ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை ஜனவரி 8-ஆம் தேதி 31 ஆயிரத்து 432 ரூபாய் என புதிய உச்சம் கண்டது. தொடர்ச்சியாக ஜனவரி 14ஆம் தேதி ஒரு சவரன் 30 ஆயிரத்து 112 ரூபாய்க்கும், பிப்ரவரி 15ஆம் தேதி 31 ஆயிரத்து 392 ரூபாய்க்கும் விற்பனையானது.
பிப்ரவரி 22 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 32 ஆயிரத்து 576 ரூபாய்க்கும், பிப்ரவரி 24-ஆம் தேதி 33 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 29-ஆம் தேதி சவரனுக்கு 624 ரூபாய் விலை குறைந்து ஒரு சவரன் 31 ஆயிரத்து 888 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
ஜனவரி 1 - ₨29,880
ஜனவரி 8 - ₨31,432
ஜனவரி 14 - ₨30,112
பிப்ரவரி 15 - ₨31,392
பிப்ரவரி 22 - ₨32,576
பிப்ரவரி 24 - ₨33,328
பிப்ரவரி 29 - ரூ.31,888