‘கி.மீட்டருக்கு 50 பைசா செலவு’ - பிரபலமாகும் மின்சார வாகனங்கள்

‘கி.மீட்டருக்கு 50 பைசா செலவு’ - பிரபலமாகும் மின்சார வாகனங்கள்

‘கி.மீட்டருக்கு 50 பைசா செலவு’ - பிரபலமாகும் மின்சார வாகனங்கள்
Published on

வாகன போக்குவரத்துத்துறை மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் சமீப காலமாக மின்சார வாகனங்களுக்கு குறிப்பாக மின்சார கார்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சீரான இயக்கம், பராமரிப்புச் செலவு, சுற்றுச்சூழல் மாசு குறைவு, ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ பயணம் ஆகியவை மின்சார வாகனங்களின் சிறப்புகளாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மின்சார வாகனங்களுக்கு உலகெங்கும் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் மின்சார வாகனங்கள் தற்போது மெல்லமெல்ல சாலைகளில் உலா வரத் தொடங்கிவிட்டது.   

இன்னும் சில ஆண்டுகளில் மி்ன்சார இருசக்கர வாகன பயன்பாட்டை அனுமதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தச் சூழலில் மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு மானிய சலுகைகளை தந்தாலும் அவற்றுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி, சாலை வரி போன்றவற்றால் பெரிய பலன் கிடைப்பதில்லை என்கின்றனர் அவற்றை பயன்படுத்துபவர்கள்.

இது தொடர்பாக முன்னணி வாகன உற்பத்தியாளர்களின் கருத்தை அரசு கேட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மின்சார வாகனங்களுக்கு பதிவுக்கட்டணத்தை ரத்து செய்ய மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் மின்சார வாகனங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மின்சார வாகனங்களுக்கும் அவற்றுக்கான பேட்டரிகளுக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாகன பயன்பாட்டில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ள நிலையில் அவற்றை களையவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற நடவடிக்கைளால் இந்திய சாலைகளில் மின்சார வாகனங்கள் கோலோச்சும் காலம் வந்துவிட்டது என்றே கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com