18 ஆண்டுகளில் இல்லாத அளவு வாகன உற்பத்தியில் வீழ்ச்சி  

18 ஆண்டுகளில் இல்லாத அளவு வாகன உற்பத்தியில் வீழ்ச்சி  

18 ஆண்டுகளில் இல்லாத அளவு வாகன உற்பத்தியில் வீழ்ச்சி  
Published on

2001இல் இருந்து கணக்கிட்ட போது கடந்த ஜூன் மாதத்தில் நிலவிய -19% வளர்ச்சியே வாகன உற்பத்தியில் மிகவும் குறைவான வளர்ச்சி என தெரிய வந்துள்ளது. 

இந்தியா முழுவதும் வாகன உற்பத்தி தொழிலில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனங்கள் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சில ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் பணிகளை இழக்கும் நிலையும் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்திய மக்களிடையே வாகனங்கள் வாங்கும் திறன் குறைந்து காணப்படுவது ஒரு காரணமாக கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாகனங்கள் உற்பத்தி துறையில் தனியார் முதலீடுகளும் சற்று குறைந்து காணப்படுவதும் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஸ்-VI ரக வாகனங்கள் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் தற்போது சந்தையிலுள்ள பிஎஸ்-IV ரக வாகனங்களின் விற்பனையை குறைவாக்கியுள்ளது. எனினும் இது குறித்து மேலும் சில காரணங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் வாகன உற்பத்தியின் வளர்ச்சி மேலும் கீழுமாக இருந்துள்ளது. எனினும் கடந்த ஜூன் மாதத்தில் நிலவிய -19% வளர்ச்சியே மிகவும் குறைவான வளர்ச்சியாகும். 

கடந்த ஜூலை மாதம் முதல் தனியார் வாகன விற்பனை குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது வணிக ரீதியான வாகன விற்பனையும் குறைந்துள்ளது. வாகன பாகங்களின் ஏற்றுமதி 4 சதவிகிதமாக வளர்ந்திருந்தாலும் அவற்றின் மூலம் வரும் வருவாய் 5 சதவிகிதம் குறைந்துள்ளது. 

அதேபோல மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி வாகன பாகங்களின் ஏற்றுமதி அதிகரித்திருந்தாலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மற்றும் இந்தாண்டு ஏப்ரல்-ஜூன் கால அளவில் வாகன பாகங்களின் ஏற்றுமதி 0.8 சதவிகிதம் வளர்ந்துள்ளது. ஆனால் இதே கால அளவில் இருசக்கர வாகன ஏற்றுமதி -8.8 சதவிகிதமாகவும், நான்கு சக்கர வாகன ஏற்றுமதி -3.3 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com