குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு#UnionBudget2025 | #UnionBudget | #BudgetWithPT | #NirmalaSitharaman | #BudgetSession | #Budget2025 pic.twitter.com/PdEZTLvhWB
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 1, 2025
குடியரசுத் தலைவர் இல்லத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தப்பின்னர் அங்கிருந்த பட்ஜெட் ஆவணங்களுடன் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்ற வாயிலில் பட்ஜெட் ஆவணங்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
Delhi: Union Finance Minister Nirmala Sitharaman is all set to present #UnionBudget2025 in the Parliament today.
— ANI (@ANI) February 1, 2025
She will present and read out the Budget through a tab, instead of the traditional 'bahi khata'. pic.twitter.com/Iky9TSOsNW
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர். கடும் அமளிக்கு இடையே பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் நிதியமச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நிலையில் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்
கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி; கூட்டுறவு துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும்
வரி, மின்சாரம், சுரங்கம், நிதி சீர்திருத்தம் உள்ளிட்ட 6 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்
அடுத்த ஐந்து வருடங்களில் மருத்துவ படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்
பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதியதிட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின பெண்கள் சுய தொழில் மூலம் முன்னேற ரூ.2 கோடி வரை கடன் வழங்க சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதல்முறை தொழில் தொடங்கும் பட்டியலின பெண்களுக்கு சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை, சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும். சிறு குறு நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக உருவாக்கி வருகின்றன.
தபால் நிலையங்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டம் அறிமுகப்படுப்பட்டுள்ளது. கிராமபுறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
பிஹாருக்கு விவசாய மேம்பாடு உள்ளிட்ட 3 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிஹாரில் தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும்.
காலணி உற்பத்தியைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.
பொம்மைகள் உற்பத்தியை ஊக்குவிக்க சலுகைகள் அளிக்கப்படும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு தேவையான கருவிகளின் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டம்
இந்தியாவில் அங்கன்வாடிகள் மூலம் 8 கோடி குழந்தைகள் பயன்பெறுகின்றனர் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் பேச்சு. மேலும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களுக்கு பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்கத் திட்டம்
விவசாயம் உள்ளிட்ட 3முக்கிய துறைகளின் தேவையை பூர்த்தி செய்ய ஏ.ஐ. தொழில்நுட்ப மையங்கள் ஏற்படுத்தப்படும்.
நாடு முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்ட் அமைக்கப்படும்.
சிறு முதல் பெரிய தொழில் வரை உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும்.
அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும். மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக பத்தாயிரம் இடங்கள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப் படிப்புகளுக்கு 75 ஆயிரம் இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்.
5 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்க புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொருள் விநியோக சேவையில் உள்ள டெலிவரி ஊழியர்களுக்கு மின்னணு பதிவு அடையாள அட்டை வழங்கப்படும்.
ஒரு கோடி பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்
இல்லங்களில் குடிநீர் ஜல்ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்
நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2047க்குள் 100 கிகாவாட் அணுமின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், சிறிய மற்றும் நடுத்தர அணு உலைகளை உருவாக்க ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் மத்திய பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிஹார் மாநில தலைநகர் பாட்னாவின் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாட்னா ஐஐடி உள்கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிஹார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடான் திட்டம் மூலம் மேலும், 120 இடங்களுக்கு விமான சேவை என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுடன் இணைந்து புதிதாக 50 சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும்.
பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது என நிதியமைச்சர் மத்திய பட்ஜெட்டில் பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 1.70 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
விண்வெளித்துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம் உருவாக்கப்படும். பிஹாரில் தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும்.
புதிய வருமான வரி மசோதா அடுத்தவாரம் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 63 ஆண்டுகள் பழமையான வரி நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் பின்னலாடைகளுக்கு இறக்குமதி சலுகைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
செல்போன் பேட்டரிகளுக்கான உற்பத்தி வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
தோல் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க தோல் இறக்குமதிக்கு சலுகை வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்க வரியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கட்டுமானத்திற்கான சலுகைகள் மேலும் 10 வருடங்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. போலவே 2 சொந்த வீடுகளுக்கு வரிச் சலுகைகள் பெறலாம். வீட்டு வாடகைக்கான TDS உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக அதிகரித்துள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் உரைகளின் நீளம்!#UnionBudget2025 | #UnionBudget | #BudgetWithPT | #NirmalaSitharaman | #BudgetSession | #Budget2025 pic.twitter.com/9Vcm4fScWS
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 1, 2025
இவற்றை தொடர்ந்து, பட்ஜெட் உரை முடிவடைந்தது. 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு இந்த பட்ஜெட் உரை நீடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.