Bitcoin
Bitcoinpt web

இந்திய மதிப்பில் ரூ.1 கோடி! உச்சத்தை எட்டிய பிட்காயின் விலை..

பிட்காயின் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பிட்காயின் விலை ரூ. 1 கோடியைத் தாண்டியது. 
Published on

செய்தியாளர் பாலவெற்றிவேல்

உலகின் மிகப் பிரபலமான கிரிப்டோ நாணயமான பிட்காயின் (Bitcoin), இதுவரையிலான தனது உச்சபட்ச விலையான $1,25,617 அமெரிக்க டாலர் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. இதன் இந்திய மதிப்பு, சுமார் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் ஆகும். இதன் மூலம், ஒரு பிட்காயின் விலை 1 கோடி ரூபாயைத் தாண்டி வர்த்தகம் செய்யப்படுவது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​​கடந்த சில மாதங்களாகக் கணிசமான விலை ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்த பிட்காயின், தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. கிரிப்டோ சந்தையின் எதிர்காலம் குறித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் உறுதியாகியுள்ளது.

​பெரிய அளவிலான நிதி நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பிட்காயினில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பது மதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Bitcoin
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் | உச்சநீதிமன்றத்தை நாடிய ஆனந்த் மற்றும் நிர்மல்குமார்

​பிட்காயினின் இந்த அதிரடி விலை உயர்வுடன், சந்தையில் உள்ள பிற முக்கிய கிரிப்டோ நாணயங்களான இத்தீரியம் (Ethereum) மற்றும் சோலானா (Solana) போன்றவையும் இரட்டை இலக்க (double-digit) வளர்ச்சி கண்டுள்ளன. இது ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தைக்கும் புத்துயிர் அளித்துள்ளது.

​தற்போது பிட்காயின் விலை $1,25,000 டாலர் வரம்பிற்கு மேல் நிலைத்திருக்குமா என்பதை முதலீட்டாளர்கள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

​இந்தியாவில் பிட்காயின் மற்றும் கிரிப்டோ நாணயங்கள் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும், பணம் படைத்தவர்கள் பலர் தொடர்ந்து பிட்காயின்களைப் பயன்படுத்தி வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த உலகளாவிய விலை உயர்வு, இந்திய முதலீட்டாளர்கள் மத்தியிலும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

Bitcoin
லே வன்முறை | சிறையில் இருந்துகொண்டு சோனம் வாங்சுக் சொன்ன செய்தி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com