‘வாகன விற்பனை 31.57% சரிவு’ - வெளிச்சத்திற்கு வந்த ‘ஆகஸ்ட்’ ரிப்போர்ட் 

‘வாகன விற்பனை 31.57% சரிவு’ - வெளிச்சத்திற்கு வந்த ‘ஆகஸ்ட்’ ரிப்போர்ட் 
‘வாகன விற்பனை 31.57% சரிவு’ - வெளிச்சத்திற்கு வந்த ‘ஆகஸ்ட்’ ரிப்போர்ட் 

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வாகன விற்பனை 31.57% குறைந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தி சங்கத்தின் (எஸ்.ஐ.ஏ.எம்) தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

வாகனத்துறையில் கடந்த சில மாதங்களாக மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன உற்பத்தி குறைந்து வருகிறது. அத்துடன் வாகன விற்பனையும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான வாகன விற்பனை தொடர்பான தரவுகளை இந்திய வாகன உற்பத்தி சங்கமான SIAM வெளியிட்டுள்ளது. 

அதன்படி கடந்த 2018ஆம் ஆகஸ்ட் மாதம் இருந்த வாகன விற்பனையைவிட இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 31.57% குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2.87 லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 1.96 லட்ச வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. 

மேலும் தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக வாகன உற்பத்தி குறைந்துள்ளதாக இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் குறிப்பாக கார் விற்பனை 2018 ஆகஸ்ட் மாதத்தைவிட 41% குறைந்துள்ளது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல இருசக்கர வாகன விற்பனையும் 2018 ஆகஸ்ட் மாதத்தைவிட 22% குறைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் தொழில் வர்த்தகம் சார்ந்த வாகனங்களின் விற்பனையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைவிட 38.71% குறைந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com