Trump & Masoud Pezeshkian web
உலகம்

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்த டிரம்ப்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே திடீரென நிகழ்ந்த பரஸ்பர தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்ட்ட குறுகிய கால போர்நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக முறிந்துவிட்டது.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

பிப்ரவரி 28ஆம் தேதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதால்,போர் தொடங்கியது. முதல் நாளிலேயே ஈரான் உச்சத் தலைவர் கொல்லப்பட்டார். இதனால் போர் தீவிரமடைந்தது. பின்பு ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும் தாக்குதல்கள் தொடர்ந்தவாறே இருந்தது. ஜூன் 17 அன்று போரை நிரந்தரமாக நிறுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஈரானும், அமெரிக்காவும் மின்னணு முறையில் கையெழுத்திட்டன. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சுவிட்சர்லாந்திலும், இரண்டாம் கட்டமாக கத்தாரிலும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது.

Ali khamenei funeral

இதற்கிடையே கொல்லப்பட்ட உச்சத்தலைவர் அலி காமேனியின் இறுதிச் சடங்கு ஜூலை 4 ஆம் தேதி துவங்கி ஊர்வலமாகச் சென்று மஷ்ஹத் (Mashhad) நகரில் ஜூலை 9 ஆம் தேதி அவர் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கு நிகழ்வின் போது அதில் பங்கேற்றிருக்கும் ஈரான் தலைவர்களை ஒரே அடியில் அழிக்க முடியும் என டிரம்ப் பேசியிருந்தார். இந்நிலையில் கத்தாரின் அல் ரெகாயத் திரவ இயற்கை எரிவாயு கப்பல் மற்றும் சவுதி அரேபியாவின் வெட்யான் கச்சா எண்ணெய்க் கப்பல் உட்பட மூன்று வணிகக் கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது ஈரான் .

hormuz

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் தங்களிடம் பதிவுசெய்து, தங்களது அதிகாரப்பூர்வ வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், அமெரிக்க கடற்படையின் வழிகாட்டுதலின்படி, கப்பல்கள் ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்தியதே இத்தாக்குதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடியாக, ஈரானின் 80-க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகள் மீது அமெரிக்க ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தியது; இதைத் தொடர்ந்து, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள 85 அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் பதிலடித் தாக்குதல் நடத்தியது.

முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

trump

துருக்கி அங்காராவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பேசிய டிரம்ப் என்னைப் பொறுத்தவரை, அது போர் நிறுத்த ஒப்ப்ந்தம் முடிந்துவிட்டது என்றே கருதுகிறேன். இனி அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர்கள் மிகவும் மோசமானவர்கள்... மனநலம் குன்றியவர்களால் வழிநடத்தப்படுபவர்கள்... நமது பேச்சுவார்த்தைக் குழுவினரிடம் நான் பேசுவேன். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள்.. அவர்கள் நல்லவர்கள் தான்.. ஆனால் ஈரான் என்னிடம் மீண்டும் வர வேண்டும். என்னைப் பொறுத்தவரை, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நேர விரயம் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

இந்தசூழலில் த்சான், ஈரான் அமெரிக்கா இடையே மீண்டும் போர் ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.