அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க சீனா, ஜப்பான், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், உலக நாடுகள் அவரது கோரிக்கையை நிராகரித்தன. இதனால், அமெரிக்கா தனியாக களமிறங்கும் சூழலில், எரிசக்திப் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் குறித்து டிரம்ப் தனது அதிரடியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்பி வைக்குமாறு சீனா, ஜப்பான் பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.. ஆனால் இவரது கோரிக்கையை உலக நாடுகள் நிராகரித்தன..
இந்த நிலையில் தான், உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தின் மிக முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிரடியான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்குத் தேவைப்படும் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும்பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இந்தப் பாதையில் ஏற்படும் எந்தவொரு தடையும் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், அதை பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் கடற்கரையோரம் உள்ள ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தப் பாதையில் செல்லும் சர்வதேசக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தகப் பாதைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா சகித்துக்கொள்ளாது என்றும், அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தப் பாதையைப் பாதுகாப்பது எரிசக்தி சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு மிக அவசியம் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நிலைப்பாடு மற்றும் 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.