Woman X
உலகம்

உறைந்து போய் நின்ற பெண்.. ராணுவ வீரர்கள் செய்த செயல்.. கண்ணீர் வரவைத்த தருணம்!!

நேபாள வெள்ளத்தில் இருந்து மீட்ட பெண் உறைந்து நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நேபாளத்தையே புரட்டிப்போட்ட பெருவெள்ளம் தான், உலக மக்கள் பலரையும் பெரும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. நேபாளத்தின் எந்தவொரு பகுதிக்கு சென்றாலும், மக்களின் ஓலமும், கண்ணீர் விட்டு கதறி அழும் சப்தங்களும், அஞ்சி நடங்கிக் கிடக்கும் பதட்டமும் தான் சிதறிக் கிடக்கிறது. சுனாமி போல் கட்டுக்கடங்காமல் வந்த வெள்ளத்தில், சிறு துரும்புகள் போன்று அடித்து செல்லப்பட்ட இன்னும் பலபேர், தங்களை யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா என்று உயிரை கையில் பிடித்து வைத்து காத்துக் கிடக்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு உணர்வுகளையும், வலிகளையும் சுமந்துக் கிடக்கும் இந்த மிகப்பெரிய பேரிடர், மற்றொரு கனமான வலியையும் ஏற்படுத்தி பலரையும் கண்ணீர் சிந்தி அழவைத்துள்ளது. அதாவது, நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய பெண் ஒருவரின் வீடியோ தான் மக்களின் இந்த கண்ணீருக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறது.

Nepal Flood

எப்போதும் போல வீட்டில் குடும்பத்துடன் சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்.. திடீரென ஒரே நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்டது அந்த கொடூரம்.. குடும்பத்தில் இருந்த அனைவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டனர்.. ஆனால், இளம்பெண் ஒருவர் மட்டும் உயிருடன் இருந்துள்ளார்.. அந்த பெண்ணை கன நேரத்தில் அடையாளம் கண்ட நேபாள ராணுவ வீரர்கள், அங்கிருந்து மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.

பாதுகாப்பாக மீண்ட பிறகும், நிம்மதி அடையாத அந்த பெண், குடும்ப உறுப்பினர் தன் கண்முன்னே அடித்து செல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து கிடந்துள்ளார்.. உலகமே இருண்டுவிட்டது போல் இருந்த அந்த பெண்ணின் கண்கள், சிறு அசைவும் இன்றி நின்றுவிட்டது.

Nepal Flood

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரையும் உலுக்கியுள்ளது.

அவர் கதறி அழுத்திருந்தால் கூட நான் பாதித்திருக்க மாட்டேன்.. அசையாமல் நின்ற அந்த பெண், அழாமல் எங்களை அழ வைத்துவிட்டாள் என்று மிகவும் எமோஷனலாக தங்களது கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே, அந்த பெருவெள்ளத்தில் இருந்து இளம்பெண்ணை மீட்ட ராணுவ வீரர்களையும், நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.