உலகம்

ஸ்னாப்ஷாட் வீடியோ எடுக்க முயற்சி: காரில் இருந்து நெடுஞ்சாலையில் விழுந்த பெண்!

webteam

லண்டனில் ஸ்னாப்ஷாட் வீடியோ எடுப்பதற்காக முயற்சி செய்த பெண் ஓடும் காரில் இருந்து கீழே விழுந்த சம்பவம் நடந்துள்ளது

செல்ஃபி எடுப்பதற்காகவும், டிக் டாக் வீடியோ எடுப்பதற்காகவும் முயற்சிகள் செய்து பல விபத்துகள் நடந்துள்ளன. ஒரு புள்ளிவிவரத்தின்படி 2011-2017க்குள் செல்ஃபி விபத்துகள் மூலம் மட்டும் உலக அளவில் 259 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக செல்ஃபி விபத்துகள் இந்தியாவில் தான் நடந்துள்ளன. அடுத்து ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான் என பட்டியல் நீள்கிறது. உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் 72% பேர் அடங்குவர்.

கடந்த வருடம் இந்தியாவில் அணையில் செல்ஃபி எடுக்க முயற்சி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் லண்டனில் ஸ்னாப்ஷாட் செயலி இது மாதிரியான விபத்துக்கு வழிசெய்து வருகிறது. லண்டனின் பரபரப்பான நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்த காரின் முன்சீட்டில் இருந்த பெண் ஒருவர் சாலையில் விழுந்தார். நல்வாய்ப்பாக அவருக்கு பெரிய அளவில் அடிபடவில்லை.

இது குறித்து பதிவிட்டுள்ள லண்டன் போலீசார் அவர் காயம் அதிகம் ஏற்படாமல் உயிர் பிழைத்துள்ளார். சொல்ல வார்த்தைகள் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.