கட்டுக்கடங்காமல் கோர முகத்தை காட்டியுள்ளது. நொடிக்கு நொடி அதி தீவிரமாக பரவி கொண்டே வருகிறது. மொத்த வாஷிங்டன் மக்களும் காட்டுத் தீயின் கோர முகத்தை கண்டு நடுங்கிப் போய் நிற்கின்றனர்.
என்ன தான் அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியில் இந்த உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே சென்றாலும் இயற்கை பேரிடர்களை தடுக்க எந்த தொழில்நுட்பமும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இயற்கைக்கு முன் அனைத்தும் தூசியே என்பதை வாஷிங்டன் சம்பவம் உணர்த்தியுள்ளது.
மணிக்கு 45 மைல் வேகக் காற்றுடன் சீறிப்பாயும் "ஓல்ட் டிரெயில்ஸ் ஃபயர்" {Old Trails Fire } பல பகுதிகளில் உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் (SPOKANE) பகுதியில் ஏற்பட்டுள்ள Old Trails Fire எனப்படும் காட்டுத்தீ, கட்டுக்கடங்காமல் அதிவேகமாகப் பரவி பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தீப்பற்றிய சில மணி நேரத்தில் காட்டுத்தீ 2,300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை விழுங்கிவிட்டது. மணிக்கு 45 மைல் வேகத்தில் வீசும் பலத்த காற்று, தீயின் சுடர்களை அதிவேகமாகப் பரப்பி வருகிறது.
காட்டுத் தீயின் கோராத் தாண்டவம் தீவிரமடைந்து வருவதால் , பல குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடிவானம் முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தங்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்ளப் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்..
தற்போது மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
காட்டுத் தீயின் கோர முகத்தை கண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் அதிர்ந்து போயுள்ளது.