'தேசிய பாதுகாப்பின் மூளையாக இருப்பவர் தோவல்..' அமித் ஷா பெருமிதம்!
புனேயில் நடைபெற்ற விழாவில் அஜித் தோவலுக்கு 2026 லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கிய அமித் ஷா, கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் முப்படைகளின் திறன் உயர்வு, வெளியுறவுக் கொள்கை வலிமை ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது என பாராட்டினார். லோக்மான்ய திலக் காட்டிய கலாச்சார தேசியவாதப் பாதையில் இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கையுடன் முன்னேறுகிறது என்றார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பின் பின்னணியில் மூளையாக இருப்பவர் அஜித் தோவல் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புனேயில் நடைபெற்ற விழாவில், அஜித் தோவலுக்கு 2026ஆம் ஆண்டுக்கான லோக்மான்ய திலக் தேசிய விருதை வழங்கிப் பேசிய அமித் ஷா, கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் முப்படைகளின் திறனை உயர்த்தவும், வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்தவும் தோவல் ஆற்றிய பணிகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை என்றார்.
மேலும், லோக்மான்ய திலக் காட்டிய கலாச்சார தேசியவாதப் பாதையில் இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பயணிக்கிறது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

