ஸ்ரீதர் வேம்பு, பிரமிளா எக்ஸ் தளம்
உலகம்

விவாகரத்து வழக்கு | ஸ்ரீதர் வேம்புக்கு ரூ.15,000 கோடி பத்திரம்.. யார் இந்த பிரமிளா ஸ்ரீனிவாசன்?

ஜோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கில், ஸ்ரீதர் வேம்புவை தனது மனைவியின் உரிமைகளை பாதுகாக்க 1.7 பில்லியன் டாலர் (ரூ. 15,278 கோடி) பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Prakash J

ஜோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கில், ஸ்ரீதர் வேம்புவை தனது மனைவியின் உரிமைகளை பாதுகாக்க 1.7 பில்லியன் டாலர் (ரூ. 15,278 கோடி) பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அவருடைய மனைவி பற்றிய தகவல்களை பயனர்கள் தேடி வருகின்றனர்.

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓவான ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவைச் சேர்ந்த பிரமிளா ஸ்ரீனிவாசனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். இந்தக் குடும்பம் கலிபோர்னியாவில் வசித்து வந்தபோது மனைவி பிரமிளாவை பிரிவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார். இவர்களது விவாகரத்து வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும், ஸ்ரீதர் வேம்பு, ஆட்டிசம் குறைபாடு உடைய மகனையும், தன்னையும் 2020ஆம் ஆண்டு நிர்கதியாக விட்டுவிட்டு இந்தியா சென்றுவிட்டதாகவும், கலிபோர்னியாவில் தன்னுடன் வாழ்ந்த காலத்திலேயே ஜோஹோ நிறுவனத்தில் அவர் பெயரில் இருந்த பங்குகளை அவரது உறவினர்களுக்கு மாற்றிவிட்டதாகவும், விவாகரத்துக்கு பிறகு தனக்கு சொத்தில் சரிபாதியை ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்க்வே ஸ்ரீதர் வேம்பு இப்படிச் செய்ததாகவும் பிரமிளா ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஸ்ரீதர் வேம்பு

இந்த நிலையில் ஜோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கில், ஸ்ரீதர் வேம்புவை தனது மனைவியின் உரிமைகளை பாதுகாக்க 1.7 பில்லியன் டாலர் (ரூ. 15,278 கோடி) பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, இவர்களின் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து பிரமிளா ஸ்ரீனிவாசன் யார் என்பது குறித்து பலரும் தேடி வருகின்றனர். அவரைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

யார் இந்த பிரமிளா ஸ்ரீனிவாசன்?

58 வயதான பிரமிளா ஸ்ரீனிவாசன் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். பர்டூ பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர், அமெரிக்காவில் கல்வியாளரும் தொழில்முனைவோருமாக அறியப்படுகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சுகாதார தொழில்நுட்பத் துறையில் நன்கு அறியப்படுகிறார். பிரின்ஸ்டனில் மின் பொறியியலில் முனைவர் பட்டம் பெற அமெரிக்கா வந்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1993இல் மணந்தார்.

பிரமிளா

குவால்காமில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இருவரும், 30 ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வந்தனர். இந்த தம்பதியருக்கு 26 வயது மகன் உள்ளார், அவருக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு, வேம்பு தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர் டோனி தாமஸுடன் சேர்ந்து, அட்வென்ட்நெட் என்ற மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார். இது 2009ஆம் ஆண்டு ஜோஹோ கார்ப்பரேஷன் என மறுபெயரிடப்பட்டது. இருப்பினும், ஜோஹோவின் சொத்துக்களின் உரிமை மற்றும் கட்டுப்பாடு தொடர்பான தகராறு அவர்களின் திருமணத்தில் முறிவுக்கு வழிவகுத்ததாக நம்பப்படுகிறது.