White House pt web
உலகம்

இடிக்கப்பட்ட வெள்ளை மாளிகையின் ஒருபகுதி.. வெளியான புகைப்படங்கள்

வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்டது குறித்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது சர்ச்சைக்கும் வித்திட்டுள்ளது.

PT WEB

வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்டது குறித்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது சர்ச்சைக்கும் வித்திட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையின் கிழக்கு பிரிவு (East Wing) முழுமையாக இடிக்கப்பட்டிருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளின்படி, இடிக்கப்பட்ட பகுதியில் தற்போது இடிபாடுகளால் மூடப்பட்ட கட்டுமான தளமாக மட்டுமே காணப்படுகிறது.

இந்த இடத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய மதிப்பில் சுமார் 2,500 கோடி ரூபாய் செலவில் புதிய பிரமாண்ட பால்ரூம் (Ballroom) ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளார். இது சுமார் 90,000 சதுர அடி பரப்பளவு கொண்டதாகவும், முக்கிய அரசியல் மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரம்பின் திட்டம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இதற்கான நிதி வரி பணத்தில் இருந்து செலவிடப்படாது; முழுமையாக தனியார் நிறுவனங்களின் நன்கொடைகளின் மூலம் தான் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

Amazon, Google, Apple, Meta மற்றும் Lockheed Martin போன்ற பெரிய நிறுவனங்கள் இதில் பங்கெடுத்துள்ளன என்று செய்திகள் கூறுகின்றன. எனினும், அமெரிக்க வரலாற்று பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள், வெள்ளை மாளிகை இடிப்பு குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள், வெள்ளை மாளிகை என்பது ஒரு தேசிய மரபுக் கட்டடம்; அதனுடைய வரலாற்று மதிப்பை இழக்கக்கூடிய நடவடிக்கை இது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.