Micro drones Reuters
உலகம்

இப்படிக்கூட ஒரு Drone-ஆ? Fuel இல்லை... Motor இல்லை! மிரட்டும் குட்டி டெக் 'அதிசயம்!'

சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள், காற்றிலும் தண்ணீரிலும் நகரக்கூடிய மிகச்சிறிய ட்ரோன்களை உருவாக்கியுள்ளார். லோசானில் உள்ள சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக Swissinfo தெரிவித்துள்ளது.

PT WEB

எரிபொருள், மோட்டார், கியர், காந்தம் எதுவுமின்றி ஒலி அலைகளை உந்துசக்தியாக்கும் EPFL ஆய்வகத்தின் புதிய ட்ரோன், மைக்ரோ படகு தொழில்நுட்பம் கவனம் ஈர்க்கிறது. cavities எனப்படும் வெற்றுக் கட்டமைப்புகள் மூலம் Helmholtz resonance நிகழ்வை பயன்படுத்தி, ஒலியின் அதிர்வெண் மாற்றத்தால் திசை, வேகம் கட்டுப்படுத்தும் இந்த குட்டி ரோபோக்கள் எதிர்கால ஏரோடைனமிக் வடிவ மாற்ற ரோபோக்களுக்கு வழி வகுக்கின்றன.

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

இந்த சிறிய வாகனங்களில் ‘cavities’ எனப்படும் பிரத்யேக வெற்றுக் கட்டமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒலி அலைகளை உந்துசக்தியாக மாற்றுகின்றன. ஒலியின் அதிர்வெண் மாறும்போது உருவாகும் உந்துவிசையின் அளவும் மாறுகிறது.

EPFL-ன் MicroBioRobotic Systems Laboratory குழு, வட்ட வடிவம் மற்றும் குமிழி போன்ற வடிவம் கொண்ட cavities-ஐ உருவாக்கியுள்ளது. ஒலி அலைகள் இந்த அமைப்புகளுக்குள் இருக்கும் காற்றை அதிரச் செய்யும்போது, காற்று ஒரு குறிப்பிட்ட திசையில் வேகமாக வெளியேறுகிறது. உள்ளே நுழையும் காற்று பரவலாக இருப்பதால், இந்த வேறுபாடு உந்துசக்தியை உருவாக்கி சிறிய ட்ரோன்களை முன்னோக்கி நகர்த்துகிறது.

Micro drones

இதற்கு Helmholtz resonance எனப்படும் இயற்பியல் நிகழ்வை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். காலி பாட்டிலின் வாயில் மெதுவாக ஊதும்போது ஒலி உருவாவதை இதற்கு எளிய உதாரணமாகக் கூறலாம்.

சுமார் ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள சிறிய படகுகளிலும் இந்த தொழில்நுட்பம் சோதிக்கப்பட்டது. அவற்றில் வெவ்வேறு அதிர்வெண்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட மூன்று cavities வரை பொருத்தப்பட்டிருந்தன. ஒலியின் அதிர்வெண்ணை மாற்றுவதன் மூலம் படகுகளின் திசையை மாற்றவும், தடைகளைச் சுற்றிச் செல்லவும், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பாதையில் தானாக நகரவும் முடிந்தது. இதேபோன்ற சோதனைகள் பறக்கும் microdrones மீதும் நடத்தப்பட்டன.

Micro drones

மோட்டார், கியர், காந்தக் கூறுகள் இல்லாமல் செயல்படுவதால், இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிகச்சிறிய மற்றும் எடை குறைந்த ரோபோக்களை உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில், ஒலியின் வெவ்வேறு அதிர்வெண்களுக்கு பதிலளிக்கும் வகையில் வடிவத்தை மாற்றிக்கொள்ளும் ஏரோடைனமிக் ரோபோக்களையும் உருவாக்க முடியும் என EPFL ஆய்வக இயக்குநர் செல்மன் சக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொருட்களை ஒலி அலைகள் மூலம் காற்றில் மிதக்கச் செய்வதும் சாத்தியமாகியுள்ளது.