சிரியா கிளர்ச்சியாளர்கள் எக்ஸ் தளம்
உலகம்

சிரியா | மின்னல் வேகத்தில் ஆட்சியை அகற்றிய கிளர்ச்சிப் படை.. அடுத்து என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?

கிளர்ச்சியாளர்கள் கையில் தற்போது சிரியா இருப்பதால், இனி அடுத்து என்ன நிகழும் என பலவித எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதுகுறித்த சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

Prakash J

கிளர்ச்சியாளர்களின் கையில் சிரியா

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவந்த நிலையில் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கிளர்ச்சியாளர்கள் மெல்லமெல்ல முன்னேறி தற்போது தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றினர். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படையும், சிரியன் தேசிய ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழுவும் இணைந்து அசாத்தின் கால் நூற்றாண்டு ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளன.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் 13 ஆண்டுகளாக பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராகப் போரிட்டனர். ஆனால், அவரை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற முடியவில்லை. ஆனால், அதே 13 நாட்களுக்குள் அல்-அசாத்தின் ஐந்து தசாப்த கால குடும்ப ஆட்சியை அகற்றியதே தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் கையில் தற்போது சிரியா இருப்பதால், இனி அடுத்து என்ன நிகழும் என பலவித எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதுகுறித்த சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

சிரியாவில் அடுத்து என்ன நடக்கும்?

இனி, சிரியாவில் வியத்தகு மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அந்த வகையில், அனைத்துக் கட்சிப் பிரிவுகளும், கிளர்ச்சிப் படைகளும் புதுப்பிக்கப்பட்ட தகவல் தொடர்பு மற்றும் அதிகாரப் போட்டிகளில் ஈடுபடும். அதன்மூலம், மத்திய கிழக்கில் அதிகார சமநிலையை மறுவடிவமைக்கப்படலாம். இதன் காரணமாக, இஸ்ரேல், துருக்கி, ஈரான் மற்றும் பிறர் நாடுகளின் மத்தியில் புதிய அதிகாரப் போராட்டங்கள் எழ நேரலாம்.

குறிப்பாக, குர்திஷ் ஆயுதப் படைகளுக்கும் எதிர்க்கட்சி போராளிகளுக்கும் இடையிலான உறவு, சிரியாவின் உள்நாட்டு விவகாரங்களின் எதிர்கால திசையை கணிசமாகப் பாதிக்கக்கூடும். இருப்பினும், சிரியாவின் நிலைமையை மதிப்பிடுவதற்கும், அணுகுமுறைகளைத் தொடர்வதற்கும் அவர்களுக்குச் சிறிது காலம் எடுக்கலாம். இவற்றைத் தவிர, சிரியாவின் உள்நாட்டு கிளர்ச்சிப் படைகள் அங்கிருக்கும் ஈரான், ரஷ்யா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்களை ஒருங்கிணைப்பதிலும் நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இந்த விஷயத்தில் ஈரான் அரசும் கவலை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

அடுத்து, இஸ்ரேல் அரசு கோலன் குன்றுகள் மற்றும் சிரியாவில் இரசாயன ஆயுதங்களை சேமித்து வைப்பது குறித்து கவலை கொண்டுள்ளது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சிரியாவால் அண்டை நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

துருக்கி, ஈராக், லெபனான், இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் அனைத்தும் சிரியாவுடனான தங்கள் எல்லைகளை மூடி வைத்துள்ளன. இதனால் எதிர்காலத்தில் சிக்கல் உருவாகலாம் எனக் கணிக்கப்படுகிறது. ”இதன்காரணமாகவே, சிரியாவின் நிலைமை எதிர்காலத்திலும் மிகவும் பதற்றமாகவே இருக்கும்” என்கின்றனர், ஆய்வாளர்கள். ”ஒருவேளை, சிரியாவின் வெற்றிடத்தை, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்பு ஒரு மாபெரும் சக்தியாக மாற்றினால், அது உலக நாடுகளைக் கவனிக்க வைக்கும்” என்கின்றனர், அவர்கள்.