டொனல்டு ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

எலான் மஸ்க் To சுசி வைல்ஸ்| ட்ரம்பின் அறிவித்த முக்கிய ஆட்சியாளர்கள்..இதுவரை யார் யார்..முழு விவரம்!

அமெரிக்காவில் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ள ட்ரம்ப் ஆட்சியில் ஒருசிலரது நியமனங்கள் உறுதிசெய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அவருடைய நிர்வாகத்தின்கீழ் முக்கியப் பதவிகளில் பணியாற்றவுள்ளவர்களின் பட்டியல் குறித்து இங்கு பார்ப்போம்.

Prakash J

அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், தம்முடைய ஆட்சியில் யார் யாருக்கு அவர் பங்கு கொடுப்பார் என்கிற தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்றபடி, ஒருசிலரது நியமனங்களும் உறுதிசெய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அவருடைய நிர்வாகத்தின்கீழ் முக்கியப் பதவிகளில் பணியாற்றவுள்ளவர்களின் பட்டியல் குறித்து இங்கு பார்ப்போம்.

சுசி வைல்ஸ், ட்ரம்ப்

வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி சுசி வைல்ஸ்!

வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக சுசி வைல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி பதவியை வகிக்கும் முதல் பெண்மணி சூசி வைல்ஸ் ஆவார். ரம்ப்பின் தேர்தல் பிரசாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகம் அமைக்கும் பணியை சூசி வைல்ஸ் நிர்வகித்தார். சுசி வைல்ஸ், டொனால்டு ட்ரம்பின் வட்டத்திலும் அதற்கு அப்பாலும் பரவலாக அறியப்படுகிறார். பலராலும் சிறந்த நிர்வாகியாக அறியப்படுகிறார். டொனால்டு ட்ரம்பின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, மேடையில் பேசுவதற்கு ட்ரம்ப் அழைத்தும் பேச மறுத்துவிட்டார்.

வெள்ளை மாளிகை ஆலோசகர் வில்லியம் மெக்கின்லி!

இவர், ட்ர்ம்பின் முதல் ஆட்சி நிர்வாகத்திலும் வெள்ளை மாளிகையின் அமைச்சரவை செயலாளராக இருந்தார். மேலும் 2024 பிரசாரத்தின்போது குடியரசுக் கட்சியின் சட்ட ஆலோசகராகவும் இருந்தார். தற்போது, வெள்ளை மாளிகையின் சட்டம் மற்றும் நடவடிக்கைகளில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எலான் மஸ்க் - விவேக் ராமசாமி ஆகியோருக்கு தலைமை பதவி!

ட்ரம்ப் அரசு நிர்வாகத்தின் அரசின் செயல்திறன் துறையில் தலைமைப் பதவிக்கு இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளர். அதில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி. மற்றொருவர் ட்ரம்பின் நண்பரும் அவருடைய தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட உலகப் பணக்காரரான எலான் மஸ்க். இவர்கள் இருவரும், அரசின் செலவினத்தில் மிகப்பெரிய அளவில் நடக்கும் வீண்செலவையும், முறைகேட்டையும் அவர்கள் தடுப்பார்கள் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

அவர்கள் இருவரும் அமெரிக்க அரசாங்கத் துறைகளைச் சீரமைப்பது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது உள்ளிட்ட நிர்வாக சார்ந்த கட்டமைப்பை சேர்ந்து கவனிக்க உள்ளனர். இது நிச்சயம் அரசு பணத்தை வீணடிப்பவர்களுக்கு அதிர்ச்சியை தரும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: உலகப்போர்? | ATACMS-ஐ பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி.. ரஷ்யா எதிர்ப்பு.. இனி என்ன நடக்கும்?

உள்துறை பாதுகாப்புச் செயலர் கிறிஸ்டி நோம்

சர்ச்சைக்குப் பெயர்போன கிறிஸ்டி நோம், அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இயற்கை பேரிடர் பணிகள், விமான நிலையங்களில் ரகசிய சேவை மற்றும் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆகியவற்றை கவனிக்க உள்ளார்.

வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ!

ட்ரம்பின் புதிய நிர்வாகத்தில், வெளியுறவுத் துறை அமைச்சராக மார்கோ ரூபியோ அறிவிக்கப்பட்டுள்ளார். ரூபியோ கடந்த காலங்களில் சீனா, கியூபா மற்றும் ஈரான் நாடுகளின் மீதான வெளியுறவு செயல்பாட்டில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். தற்போது ரூபியோ செனட் புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவராகவும், வெளியுறவுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மாட் கேட்ஸ்!

அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் மாட் கேட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். பாலியல் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டுகளுக்குள்ளான மேட் கேயட்ஸை, ட்ரம்ப் நியமித்ததும் அவரின் குடியரசுக் கட்சியிலேயே சா்ச்சை வெடித்தது.

துளசி கபார்டு

தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்டு

தேசிய உளவுத்துறையின் இயக்குநராக துளசி கபார்டு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கிடையேயான உளவுத்துறை ஆபரேஷன்களில் முக்கிய நபராக இருந்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத்!

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளராக முன்னாள் ராணுவ வீரரும், பாக்ஸ் நியூஸ் தொகுப்பாளருமான பீட் ஹெக்சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹெக்சேத் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட "The War on Warriors: Behind the Betrayal of the Men Who Keep us Free" என்ற நூலின் ஆசிரியரும் ஆவார்.

இதையும் படிக்க: ”புதிய ஆட்சியுடன் இணைந்து செயல்பட தயார்” - ஜோ பைடனிடம் தெரிவித்த ஜின்பிங்.. ட்ரம்பின் திட்டம் என்ன?

சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப்

இவர், ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தின் இறுதி ஒன்றரை ஆண்டுகளில் தேசிய உளவுத்துறையின் இயக்குநராக இருந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின்போது அமெரிக்க அரசாங்கத்தின் உளவு அமைப்புகளையும் வழிநடத்தினார். தற்போது அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை தகவல் தொடர்புத் துறை துணைத் தலைவர் டான் ஸ்கவினோ

வெள்ளை மாளிகையில் ட்ரம்பின் நிர்வாகத்தில் மிக நீண்டகாலம் பணியாற்றிய மற்றும் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவர் டான் ஸ்கவினோ. ட்ரம்பின் 2024, 2016 மற்றும் 2020 பிரசாரங்களுக்கும் மூத்த ஆலோசகராக இருந்துள்ளார். மேலும், வெள்ளை மாளிகையில் ட்ரம்பின் சமூக ஊடக கணக்குகளை ஸ்கவினோ இயக்கி வருகிறார். இவர் தற்போது வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு துறை துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ட்ரம்ப்வுக்கு உதவியாளராகவும் இருப்பார்.

டான் ஸ்கவினோ

சட்டமன்ற, அரசியல் மற்றும் பொது விவகாரங்களுக்கான துணைத் தலைவர் ஜேம்ஸ் பிளேயர்!

ட்ரம்பின் 2024 தேர்தல் பிரசாரத்திற்கும், குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவிற்கும் பிளேயர் அரசியல் இயக்குநராக இருந்தார். தற்போது இவர் சட்டமன்ற, அரசியல் மற்றும் பொது விவகாரங்களுக்கான துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரும் ட்ரம்பின் உதவியாளராகவும் இருப்பார்.

தகவல் தொடர்பு மற்றும் பணியாளர்களுக்கான துணைத் தலைவர் டெய்லர் புடோவிச்

ட்ரம்ப்பின் மூத்த தேர்தல் பிரசார உதவியாளர்களில் ஒருவரான டெய்லர் புடோவிச், தகவல் தொடர்பு மற்றும் பணியாளர்களுக்கான துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த முறை ட்ரம்ப்பின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரும் ட்ரம்பின் உதவியாளராகவும் இருப்பார்.

இதையும் படிக்க: ”எங்களுக்கு ஒரு ட்ரம்ப் தேவை; அதே வகையான புரட்சி..”-பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் எலிசபெத் லிஸ் ட்ரஸ்!

மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதர் ஸ்டீவன் விட்காஃப்

ட்ரம்பின், கோல்ஃப் விளையாட்டின் பார்ட்னர் ஸ்டீவன் விட்காஃப், மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி புளோரிடாவின் வெஸ்ட்பாம் பீச்சில் ட்ரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு முயற்சி நடந்தது. அப்போது ட்ரம்பின் கிளப்பில் இவர்தான் கோல்ஃப் விளையாடி கொண்டிருந்ததாக சொல்லப்பட்டது.

இஸ்ரேலுக்கான தூதர் மைக் ஹக்கபி!

இஸ்ரேலின் உறுதியான பாதுகாவலர் ஆக மைக் ஹக்கபீயை, ட்ரம்ப் நம்புகிறார். அமெரிக்காவின் நட்பு நாடான ஈரான் - ஹமாஸ் இடையே நடந்துவரும் போருக்கு மத்தியில், மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த மைக் அயராது உழைப்பார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ராபா்ட் எஃப். கென்னடி (ஜூனியா்)

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்

அமெரிக்காவில் ஸ்பீல்ட் மற்றும் ராபர்ட் கேட்ஸ் தேசிய பாதுகாப்புத் தலைவர்களாக இருந்தபோது பென்டகனில் கொள்கை ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானில் பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ள மைக் வால்ட்ஸ் சீனாவின் பருந்தாகவும் அழைக்கப்படுகிறார்.

சுகாதாரத் துறை அமைச்சர் ராபா்ட் எஃப். கென்னடி!

சுகாதாரத் துறை அமைச்சராக, முன்னாள் அதிபா் ஜான் எஃப். கென்னடியின் உறவினா் ராபா்ட் எஃப். கென்னடி (ஜூனியா்) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கடுமையாக எதிா்ப்பு எழுந்துள்ளது. சுற்றுச்சூழல் வழக்குரைஞரான ராபா்ட் எஃப். கென்னடி, தடுப்பூசிகளுக்கு எதிராக பிரசாரம் செய்துவருபவா். மேலும், மருத்துவம் தொடா்பான பல்வேறு சதித் திட்ட ஊகங்களை அவா் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அவரை சுகாதாரத் துறை அமைச்சராக நியமிப்பது தவறான முடிவு என்று அந்த நாட்டு பொது சுகாதாரத் துறை சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கூறியுள்ளன.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா தேர்தல்|கடும் போட்டியில் இரண்டுகூட்டணி; மீண்டும் காத்திருக்கும் முதல்வர் பதவி பஞ்சாயத்து

வெள்ளை மாளிகையின் செய்திச் செயலாளர் கரோலின் லீவிட்

வெள்ளை மாளிகையின் செய்திச் செயலாளராக கரோலின் லீவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கல்லூரியில் பயின்ற காலத்தின்போதே, ட்ரம்பின் வெள்ளை மாளிகையின் பத்திரிகை அலுவலகத்திலும், ஃபாக்ஸ் நியூஸிலும் பயிற்சி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 27 வயதன இவர், இதன்மூலம் உயர் பதவியை வகிக்கும் இளைய நபர் எனப் பெருமை பெறுகிறார்.

படைவீரர் விவகார செயலாளர் டக் காலின்ஸ்

படைவீரர் விவகார செயலாளராக முன்னாள் ஜார்ஜியா பிரதிநிதி டக் காலின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2013 முதல் 2021 வரை காங்கிரஸில் பணியாற்றிய காலின்ஸ், 2020ல் ஜார்ஜியாவுக்கான அமெரிக்க செனட்டராகத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது அவர் அமெரிக்காவின் விமானப்படை ரிசர்வ் கமாண்டில் ஒரு பாதிரியாராக உள்ளார்.

வெள்ளை மாளிகை

கொள்கைக்கான துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர்!

கொள்கைக்கான துணைத் தலைவராக குடியேற்ற ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ட்ரம்பின் 2017-2021 ஆட்சியின்போது கொள்கைக்கான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக இருந்தார் மற்றும் குடியரசுக் கட்சியின் பரந்த குடியேற்ற ஒடுக்குமுறைக்கு உந்து சக்தியாக இருந்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை நிர்வாகி லீ செல்டின்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் நிர்வாகியாக லீ செல்டின் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் நியூயார்க் GOP பிரதிநிதியான இவர், கிழக்கு லாங் தீவில் குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினராக நான்கு முறை பணியாற்றியவர். 2003இல் அல்பானி சட்டப் பள்ளியில் சட்டப் பட்டம் பெற்ற ஜெல்டின், ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். அவர் ஆரம்பத்தில் நியூயார்க் மாநில செனட்டில் உறுப்பினராக இருந்தார்.