ஜான் ஹால்ஃபோர்ட், கேரி சி.என்.என்.
உலகம்

எரித்ததாக போலி சாம்பல் கொடுத்துவிட்டு 190 சடலங்களை சேமித்த நபர்! அமெரிக்காவில் பகீர் சம்பவம்

அமெரிக்காவில் சடலங்களை பதுக்கி வைத்து, அவற்றை எரித்ததாக, போலி அஸ்தி கொடுத்து ஏமாற்றியவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Prakash J

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் பென்ரோசில் பகுதியைச் சேர்ந்தவர், ஜான் ஹால்ஃபோர்ட். இவர், அப்பகுதியில் சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் பணியினைச் செய்து வருகிறார். இந்த நிலையில், அவருக்குச் சொந்தமான ஒரு பாழடைந்த கட்டடத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் கடந்த 2023இல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது, 190 உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு சிதைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

usa

கொரோனா காலத்தின்போது, 2019 முதல் 2023 வரை, ஹால்ஃபோர்ட்டும் அவரது மனைவி கேரியும் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு உடல்களை எரிக்காமல் சேமித்து வைத்து வந்துள்ளனர். மேலும், அவர்களுக்கு போலி சாம்பல் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தவிர, கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்காக, அரசிடம் இருந்து, 8 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஜான் ஹால்ஃபோர்டுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.