அமெரிக்கா ராணுவம் web
உலகம்

திரிபோலியை களமிறக்கிய அமெரிக்கா.. ஈரானை நோக்கி 2000 வீரர்கள்! சமாளிக்குமா ஈரானின் புரட்சிப்படை?

ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத வகையில் அமெரிக்கா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது 2 ஆயிரம் வீரர்களை ஈரானை நோக்கி அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள சம்பவம் உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

விமல் ராஜ்

மத்திய கிழக்கில் நிலவும் போர்நிலை காரணமாக அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ் திரிபோலி போர் கப்பலுடன் 2000 வீரர்களை ஈரானை நோக்கி அனுப்பியுள்ளது. இதனால், ஈரானின் புரட்சிப்படை அமெரிக்காவின் தரைவழி தாக்குதல்களை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய கிழக்கில் 3 வாரங்களை கடந்தும் தற்போது வரை அங்கு ஏவுகணை சத்தங்களும் சைரன் சத்தங்களும் ஒளித்து கொண்டே தான் இருக்கின்றன.. இடைவிடாமல் இஸ்ரேலும் அமெரிக்காவும் மாறி மாறி டிரோன் தாக்குதல் மட்டுமின்றி ஏவுகணை தாக்குதலையும் ஈரான் மீது நடத்தி வருகிறது.. சற்றும் சளைக்காத ஈரான் இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தப் போரால் உலகின் 20 சதவீதத்துக்கு இணையாக கச்சா எண்ணெய் போக்குவரத்து நடந்து வரும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கையால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது உலகளவில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானை நீர்மூழ்கிக்கப்பல் மூலம் அமெரிக்கா தாக்குதல்

இந்த நிலையில் தான் ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.. இவரது கோரிக்கையை நிராகரித்த உலக நாடுகள் தற்போது ஆதரவு அளிக்க முன் வந்துள்ளன..

இதனைதொடர்ந்து இந்த நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில், அமெரிக்காவின் பிரமாண்ட போர் கப்பலான யு எஸ் எஸ் திரிபோலி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களுடன் ஈரானை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது..

இந்தப் போர் கப்பலில் ஜப்பானின் ஒகினாவாவை தளமாக கொண்ட படைப்பிரிவு வீரர்கள் உள்ளனர்.. இவர்கள் வான்வழித் தாக்குதல் மட்டுமின்றி தரைவழி தாக்குதல்கலை மிக துல்லியமாக நடத்தும் திறன் கொண்டவர்கள் என கூறப்படுகிறது.. யு.எஸ்.எஸ் திரிபோலி போர் கப்பலில் அதி நவீன போர் விமானங்கள் மட்டுமின்றி ஹெலிக்காப்டர்களும் உள்ளன.. ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை மட்டும் நடத்தி வந்த அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தும் வீரர்களை அனுப்பி வைத்திருப்பது, போரை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எடுத்து செல்வதாகவே பார்க்கப்படுகிறது..

அமெரிக்கா - ஈரான் போர்

இதுவரை இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய வான் வழித் தாக்குதல்களை சமாளித்து வந்த ஈரான் அமெரிக்கா அடுத்து நடத்தப்போவதாக கூறப்படும் தரைவழித் தாக்குதல்களை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது..

இது ஒருபுறம் இருக்க போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த உலகநாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.