இந்தியாவுக்கு ஏற்கெனவே 25 சதவீத இறக்குமதி வரியை ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் இந்தியா எண்ணெய்யை வாங்குவதுடன், அதனை பெரிய லாபத்திற்கு சந்தையில் விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
ரஷ்ய தாக்குதலில் எத்தனை உக்ரைன்மக்கள் கொல்லப்பட்டாலும் அதனைப்பற்றி இந்தியாவுக்கு கவலை இல்லை எனவும் சாடியுள்ளார். இதனால் இந்தியா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை கணிசமாக உயர்த்தப்படும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா நியாயமற்ற முறையில் நடப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இன்னும் அதிக வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்கா நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை குறி வைக்கும் அமெரிக்கா, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இந்தவிவகாரத்தில் தேசநலன் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.