ட்ரம்ப்  முகநூல்
உலகம்

ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு | பிப்.19க்குள் குழந்தை பெற அவசரம் காட்டும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்!

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த அறிவிப்புதான்.

திவ்யா தங்கராஜ்

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற உடன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த அறிவிப்புதான். அதாவது பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை வழங்கும் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் ரத்து செய்திருப்பது தான்.

பெற்றோரின் நாடு , அவர்களின் குடியேற்றம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், குழந்தைகள் பிறந்த நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கானவழிவகை அமெரிக்காவின் இருந்து வந்தது. அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அந்நாட்டின் குடியுரிமை வழங்கவேண்டும் என்பதே இதன் பொருள். ஆனால் இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

அதிபராக பதவியேற்ற பிறகு அவர் கையெழுத்திட்டுள்ள உத்தரவில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் அந்நாட்டின் குடியுரிமை பெற, அவர்களின் பெற்றோர் ஒருவராவது அமெரிக்க குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்காலிக வேலை விசாக்கள் அல்லது சுற்றுலா விசாக்களில் அமெரிக்கா சென்று வசித்து வரும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை என்பது கிடைக்காது.

இந்த அடுத்த 30 நாட்களை நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் பிப்ரவரி 19, 2025 வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான் குடியுரிமை கிடைக்கும்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பு பரபரப்பை கிளப்பிய நிலையில், இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் குழந்தையை பெற்றெடுப்பதில் அவசரம் காட்டி வருகின்றனர்.

அதாவது பிப்ரவரி 19 வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைக்கும் என்பதால், அதற்குள் குழந்தையை ’c section’ மூலம் பெற்றெடுக்க தம்பதிகள் அவசரம் காட்டி வருகின்றனர். இது தாய் மற்றும் குழந்தையின் உடல் நலத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.